ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி
அணைக்கரைப்பட்டி ஜும்மா பள்ளிவாசலில் 18 2 2025 செவ்வாய்க்கிழமை மாலை 6:30 முதல் 8:30 வரை நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ரமலான் நகர் ஜும்மா பள்ளிவாசலின் இமாமும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியருமான மௌலவி சம்சுதீன் பைஜி அவர்கள் வருகை தந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு அணைக்கரைப்பட்டி ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அணைக்கரைப்பட்டி ஜும்மா பள்ளிவாசலின் இமாமும் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினருமான ஆலிம் சர்தார் பாஷா அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழிநடத்தி அமைத்து தந்தார்.
அணைக்கரை பட்டியில் நடந்த ரமலானே வருக நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மவுலவி சம்சுதீன் பைஜி அவர்கள் தங்களின் உரையில் கூறுகையில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானை குறித்தும் ரமலானில் கடைபிடிக்கக் கூடிய அமல்களை குறித்தும் பல அறிவிப்புகளையும், வழிகாட்டுதலையும் நமக்கு தந்திருக்கிறார்கள்.
ரமலானே வருக ! என்ற இந்த நிகழ்ச்சியின் மூலமாக வெறுமனே அவைகளை நினைவூட்டுவது நோக்கம் அல்ல மாறாக நாம் அடையப் போகின்ற ரமலான் மாதத்தில் முறையாக திட்டமிட்டு அமல்கள் செய்து நன்மைகளை பெற வேண்டும் பெறுவதற்கான தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த ரமலானை வருக நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
ரமலானை பொறுத்த வரைக்கும் அல்லாஹ் ஒவ்வொரு செயல்களிலும் பல நன்மைகளை நமக்கு வைத்திருக்கின்றான் உணவு உண்பதில் இருந்து நோன்பு திறக்க கூடிய அந்த நேரம் வரைக்கும் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹுத்தஆலா பன்மடங்கான நற்கூலியை தர காத்துக் கொண்டிருக்கிறான்.
நாம் உண்ணுகின்ற சகர் உணவு இருக்கிறதே! அதில் அல்லாஹ் சுபஹானஹூதஆலா பரக்கத்தை வழங்கி இருக்கின்றான்.
வெறுமனே பசி எடுக்காத ஒரு நிலை மட்டுமல்ல மாறாக அந்த உணவால் நம்முடைய
* உடல் ஆரோக்கியம் பெறுகிறது
* மன வலிமை பெறுகிறது
* ஈமான் பெறுகிறது
மற்ற நாட்களில் ஒருவேளை உணவு உண்ணவில்லை என்றால் மனிதனுடைய உடல் செயலாற்றதாக, செயல்பட மறுக்கக்கூடிய நிலை உருவாகின்றது. ஆனால் இறைவனுடைய அருளை பாருங்கள் அதிகாலை நான்கு மணிக்கு ஸஹருடைய உணவு உண்டு விட்டு நீர் அருந்தாமல் மற்ற பானங்கள் அருந்தாமல் வெறுமனே இறைவனை பயந்து நாம் நோன்பு பிடிக்கின்ற அந்த காலம் மாலை வரை எந்தவிதமான மயக்கமோ, கிறக்கமோ எதுவுமே இல்லாமல் எப்படி தெம்பு கிடைக்கிறது! எங்கிருந்து வலிமை வருகிறது!
இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது.
அதனால் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள் அதில் பர்க்கத் இருக்கிறது என்று. அல்லாஹுத்தஆலா வைத்திருக்கக் கூடிய இந்த நியமத்தை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த சமூகத்துக்கு நினைவூட்டி, இந்த சமூகத்திற்கு ஆர்வமூட்டினார்கள்.
இப்படி ஒவ்வொரு அமல்களையும் தங்களுடைய உரைகளில் மேற்கோள் காட்டி ரமலானில் நாம் செய்ய வேண்டிய அமல்களை அழகுற நினைவூட்டி சிறப்பாக உரை நிகழ்த்தினார்.
இறுதியாக துஆவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
இடம்: அணைக்கரைப்பட்டி