News Channel

JIH ladies wing


கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மதரஸதுன் தய்யிபா வின் இரண்டாம் ஆண்டுவிழா 
 16.02.25அன்று ரஹ்மானியாபுரம் ஜமாஅத் தே இஸ்லாமிஹிந்த் அலுவலகத்தில் வைத்து சிறப்புடன் நடைபெற்றது.. 
ஜமாஅத் ஊழியர் சகோதரி ஷகீலா கிராஅத் ஓதி துவக்கிவைத்தார்.

கடையநல்லூர் ஜமாஅத் தே இஸ்லாமிஹிந்த் அமீரேமகாமி 
சகோதரர் பீர்முஹம்மது அவர்கள் துவக்க உரை நிகழ்த்த, 
சிறுவர், சிறுமிகளின் திருக்குர்ஆன் சூராமனனம், துஆக்கள், சிறு உரைகள், இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது..

மெளலவி அபுல்பரகாத் பைஜி அவர்கள்  இஸ்லாமிய வார்ப்பில் குழந்தை வளர்ப்ப  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.               
போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளுக்கு  அமீரேமகாமி பரிசளித்து குழந்தைகளைப் பாராட்டினார்கள்.

சிறுவர், சிறுமிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

சகோதரி ஆயிஷா இனிதே நிகழ்ச்சி யைத் தொகுத்து வழங்கினார்..

சகோதரி அல்லி நன்றி கூறினார்..