News Channel

ரமலானே வருக ! சிறப்பு நிகழ்ச்சி

ரமலானே வருக! 
சிறப்பு நிகழ்ச்சி மதுரை மாவட்டம் காண்டை பகுதியில் கடந்த 17.2.2025 திங்கள்கிழமை மாலை 6:30 மணி முதல் எட்டு முப்பது மணி வரை காண்டை ஜும்மா பள்ளிவாசலில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் ராமநாதபுரம் தீன் நகர் ஜும்மா பள்ளிவாசலின் இமாமான மௌலவி ஜாபர் சாதிக் மன்பஈ அவர்கள் கலந்து கொண்டார்கள். 

ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சிக்கு காண்டை முஸ்லீம் ஜமாத் தலைவர் ஜனாப், அப்துல் மஜீத் அவர்கள் தலைமை தாங்கினார், 

இச் சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அழகுற வழிநடத்தி அமைத்து தந்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் காண்டை ஜூம்மா பள்ளிவாசலில் இமாமான மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி அவர்கள் வழி நடத்திக் கொடுத்தார்கள். 

ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்றிய மவுலவி ஜாபர் சாதிக் மன்பஈ அவர்கள் தங்களின் உரையில் கூறுகின்ற பொழுது... ரமலானே வருக என்ற இந்த மாபெரும் அருள் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கின்றோம் இந்த மாதம் நமக்கு தரக்கூடிய செய்தியும் பயிற்சியும் நாளை மறுமையில் நம்மை சுவனவாதியாக மாற்றக் கூடிய மாபெரும் பாக்கியம் நிறைந்த மாதமாக இருக்கிறது. 
அந்த பாக்கியம் நிறைந்த மாதத்தை நாம் உணர்ந்து அதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அமல்களையும் செயல்களையும் நாம் மனதிருப்தியோடு இறைவனிடத்தில் கூலி பெறக்கூடிய எண்ணத்தோடு நாம் அணுக வேண்டும். 
இந்த மாதம் எப்படிப்பட்ட மாதமாக இருக்கிறது என்று சொன்னால் ஒரு நோன்பாளிக்கு நாம் நோன்பு திறக்க உதவி செய்தால் ஒரு நோன்பாளி நாள் முழுவதும் நோன்பு வைத்து எந்த நன்மையை சம்பாதிப்பாரோ நோன்பு திறக்க வைப்பதால் அதே கூலியை அல்லாஹுத்தஆலா நமக்கும் தருகிறான் என்றால் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் இந்த ரமலானில் அல்லாஹுத்தஆலா எவ்வளவு அருள் வளங்களை வைத்திருக்கிறான் என்று ! 
* நாம் பேசுகின்ற பேச்சால் 
* நாம் கொடுக்கின்ற உதவியாள் 
* அடுத்தவர் மீது காட்டக்கூடிய அன்பால் 
* அரவணைப்பால் 

நாம் எண்ணிப் பார்க்க முடியாத, எண்ணிலடங்க முடியாத நற்கூலியை அல்லாஹுத்தஆலா இந்த மாதத்தில் தருவதற்கு தயாராக இருக்கிறான். 

ஆகவே வர இருக்கின்ற 
* அருள் வளமும் பர்க்கத்தும் நிறைந்த இந்த மாதத்தை நாம் முழுமையாக அடைய வேண்டும். 
* அதில் நாம் நோன்பு நோற்க வேண்டும். 
* நற்காரியங்களில் ஈடுபட வேண்டும் 
* இறைவன் தரப்பிலிருந்து தரக்கூடிய கூலியை முழுமையாக பெற வேண்டும். 

என்கின்ற செய்தியை மிக அழகிய முறையில் எடுத்துரைத்தார். 

காண்டை ஜமாஅத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இடம் : காண்டை