News Channel

ரமலானே வருக !

ரமலானை வருக சிறப்பு நிகழ்ச்சி 
கடந்த 16.2 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை 6:30 மகரிப் தொழுகை பிறகு கோட்டை யேந்தலில் ரமலானை வருக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் ஓடை குளம் பள்ளிவாசலின் இமாமான மௌலவி ஆதம் அலி பைஜி அவர்கள் கலந்து கொண்டார்கள். 

இந்நிகழ்ச்சியை கோட்டை யேந்தல் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 

இந்த நிகழ்ச்சியை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் கோட்டை யேந்தல் ஜும்மா பள்ளிவாசலின் இமாமான ஆலிம் அப்துல் ரகுமான் தாவதி அவர்கள் ஏற்பாடு செய்து சிறப்பாக வழி நடத்தினார். 

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மௌலவி , ஆதம் அலி பைஜி அவர்கள் ரமலானை வருக என்கின்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அவர் கூறுகையில் ரமலானை வருக என்ற நிகழ்ச்சி இந்நிகழ்ச்சிக்கு பிறகு தான் மனித குலத்துக்கு ரமலான் வருவது தெரியும் என்பது அல்ல! மாறாக இந்த ரமலானில்
* நாம் என்ன செய்ய வேண்டும் 
* இந்த ரமலானில் நம்முடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் 
* இந்த ரமலானில் நம்முடைய எதிர்பார்ப்புகள் எப்படி இருக்க வேண்டும்  
* இந்த ரமலானில்  நன்மைகளால் நாம் எதை பெற வேண்டும் 

போன்ற விஷயங்களை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள். ரமலான் மாதங்களில் முஸ்லிம்கள் முழுக்க முழுக்க இபாதத்துகளிலும், நற்காரியங்களிலும் ஈடுபட வேண்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவர் ஒருவர் நன்மை எதிர் பார்த்து ரமலானில் நோன்பு வைக்கின்றாரோ அவர் நாளை மறுமையில் பாவங்கள் மன்னிக்கப்பட்டவராக இறைவன் அவரை சந்திப்பான். ரமலானில் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் இறைவனால் பொரிந்திக் கொள்ளக்கூடிய செயலாக இருக்கின்றது. நாம் செய்கின்ற செயல் அது எவைகளாக இருந்தாலும் சரி நாம் அதை மன ஓர்மையோடு இறைவன் புறத்தில் கூலி எதிர்பார்த்ததை எண்ணத்தோடு நாம் ரமலானில் பயணித்தோம் என்றால் நாம் செய்கின்ற எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது நமக்கு சுவனத்துக்கான நன்மையாக மாறும் என்பது எந்த சந்தேகமும் இல்லை. என்பதை மேற்கோள் காட்டி பல செய்திகளை அவர் தங்களுடைய உரைகளில் சுட்டிக்காட்டினார். 

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கோட்டை யேந்தல் ஜமாத்தில் உள்ள அனைத்து ஆண்கள் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு துஆ உடன் நிறைவடைந்தது.

இடம் : கோட்டை யேந்தல்  - இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல்