ரமலானை வருக! சிறப்பு நிகழ்ச்சி
JIH-ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த், இஸ்லாமிக் சென்டர்(ICM) ஊழியர் வட்டத்தின் சார்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள ஊராம் பட்டியில் 16.2.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணி முதல் லுகர் தொழுகை வரை நடைபெற்றது.
இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும், ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியில் உள்ள மதினா நகர் பள்ளிவாசலின் இமாம் ஆகிய ஆலிம் முஹம்மது ரபிக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியை ஊராம் பட்டி ஜமாத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார் .
ஊராம் பட்டி பள்ளிவாசல் இமாமும், ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரான ஆலிம் அக்பர் இக்பால் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து சிறப்பாக வழிநடத்தி கொடுத்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுவதற்காக வருகை புரிந்த ஆலிம் முஹம்மது ரபிக் அவர்கள் அவர்களின் உரையில் இவ்வாறு கூறினார்
ரமலானை ஏன் வரவேற்க வேண்டும் ?
ரமலானே வருக நிகழ்ச்சி எதற்கு ?
நம் வீடுகளில் முக்கிய நிகழ்வு நடக்க இருப்பதாக இருந்தால் நம்மளுடைய எண்ணமும் சிந்தனையும் எப்படி இருக்கும் என்பதை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள் எந்த நிகழ்வோ அந்த நிகழ்வை குறித்து முழுமையாக தெரிந்து கொள்வோம் அந்த நிகழ்வில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம் அதற்கான அனைத்து தேவைகளுமே திட்டமிடுவோம் இறுதியாக அது சிறப்பாக நடைபெறுவதற்காக நம் உடலையும் உள்ளத்தையும் பொருளாதாரத்தையும் தயார்படுத்துவோம் பிறகு அந்த நிகழ்விலே நாம் அடி எடுத்து வைப்போம்.
எடுத்துக்காட்டாக :
திருமணம் : நம்முடைய வீட்டில் திருமணம் நடக்கின்றது எனில் அந்த திருமணத்திற்கு எத்தனை மாதங்களுக்கு முன்பாக திருமண ஏற்பாடுகளை செய்வோம் !
அல்லது நம்முடைய வீடுகளில் மற்ற விசேஷங்கள் நடக்கின்றன என்றால் அதற்கு நாம் எத்தனை நாட்களுக்கு முன்பாக வேலைகளை ஆரம்பம் செய்வோம் !
வீடு கட்டுவது :
வீடு கட்ட ஆரம்பிக்கின்றோம் எனில் அந்த வீடு கட்டுவதற்கு முன்கூட்டியே நாம் என்ன என்ன தீர்மானங்கள் எடுப்போம் !
ரமலானே வருக! நிகழ்ச்சி:
அதே போலத்தான் வர இருக்கும் ரமலான் மாதமும் ! மனதால் , உள்ளத்தால் , உடலால் நாம் தயாராக வேண்டும்.
இதன் முக்கியத்துவம்:
முக்கிய நாட்களில் தள்ளுபடி போல ; பெரிய பெரிய நிறுவனங்கள்
* ரம்ஜான் தள்ளுபடி ,
* பக்ரீத் தள்ளுபடி ,
* தீபாவளி தள்ளுபடி ,
* பொங்கல் தள்ளுபடி
* புத்தாண்டு தள்ளுபடி
போன்ற விசேஷ நாட்களில் கிடைக்க கூடிய சலுகை மற்ற நாட்களில் கிடைக்காது.! அதே போலத்தான் ரமலான் மாதங்களில் கிடைக்க கூடிய நன்மை மற்ற மாதங்களில் கிடைக்காது.! ரமலான் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களுக்கு ஒன்றுக்கு பத்தல்ல ஒன்றுக்கு 700 மடங்கு அளவுக்கு நன்மை கிடைக்க தயாராகிய மாதத்தை பயன்படுத்தி
நம்மையை அல்லிச்செல்லக் கூடிய வர்களாக நாம் மாறவேண்டும் .
அது எப்படி?
1. முதலில் 30 நாட்களும் நோன்பு வைக்க நிய்யத் செய்வோம்
2. இரவு நேரத் தொழுகைகளை பேணுதலாக கடைப்பிடிப்போம்
3. குர்ஆனை அதிகம் அதிகமாக ஓதுவோம்
4. முடிந்தவரை குர்ஆனை முழுமையாக படித்து முடிப்போம்
5. இறை தியானம் பிரார்த்தனையில் அதிகமாக ஈடுபடுவோம்
6. பொய்யான அருவெருக்கத்தக்க செயல்களில் இருந்து விலகி வாழ்வோம்
7. மனித குல அமைதிக்காக பிரார்த்தனை செய்வோம்
8. கடைசி பத்து நோன்புகளில் ஓய்வு எடுக்காமல் ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை தேட பாடுபடுவோம்
9. கடைசி பத்து நோன்புகளில் இஃதிகாப் இருக்க முயற்சி செய்வோம்
10. அதிகமதிகம் தர்மம் செய்வோம்
11. ஸகர் உணவு இல்லாதவர்களுக்கு ஸஹர் ஏற்பாடு செய்வோம்
12. இப்தார் நேரங்களில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வோம் .
இன்னும், இப்படி ரமலான் மாதத்தில் இருக்கக்கூடிய சிறிய காரியமாக இருந்தாலும் சரி, பெரிய காரியமாக இருந்தாலும் சரி, அவைகளை முறையாக முறைப்படுத்தி அமல்கள் செய்கின்ற பொழுது அல்லாஹுத்தஆலா இதற்கு வெகுமதியாக சுவனத்தை வழங்குவதாக வாக்களித்து இருக்கின்றான் என்று அவர் தன் உரையில் கூறினார்.
இடம் : ஊராம்பட்டி / சிவகாசி, விருதுநகர் மாவட்டம்