13 ஆம் ஆண்டு விழா
திருப்பூர்
நூருல் ஹுதா மக்தப்
13 ம் ஆண்டு விழா
16.02.2025 ஞாயிறு
மாலை சரியா 4 மணிமுதல் இரவு 10 வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு
மஸ்ஜிதுல் ஹுதா முத்தவல்லி A.முஹம்மது காசிம் அவர்கள் தலைமை வகித்தார்.
அல்ஹுதா வெல்ஃபேர் டிரஸ்ட்(AWT)
பொதுச்செயலாளர்
S.சாகுல் ஹமீது அவர்கள்
துவக்க உரை நிகழ்த்தினார்.
50 வது வார்டு கவுன்சிலர் பெனாசிர் நிஷா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மௌலவி A.முஹம்மது இக்பால் யூசுபி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
நூருல் ஹுதா மக்தப் மதரஸாவில் பயின்று வரும் 85 மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில்
குர்ஆன் மனனம்,
ஹதீஸ் மனனம்,
துஆக்கள்,
பேச்சுப்போட்டி,
வினாடி வினா போட்டி,
பாங்கு சொல்லுதல்,
பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்வுகளை பெற்றோர்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காண்பித்தார்கள்.
போட்டிகளில் பங்கெடுத்த அனைத்து மாணவ&மாணவிகளுக்கும் பல்வேறு வகையான
பரிசுகள்,கேடயம்,
நினைவு பரிசுகள்,
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) மகளிர் அணி,SIO, solidarity பொறுப்பாளர்கள் மூலமாக வழங்கப்பட்டன.
ஆண்டு விழா நிகழ்ச்சியை
மிகச் சிறப்பாக ஐடியல் டியூசன் சென்டர் ஆசிரியை சகோதரி T.பெனாசிர் நிஷா அவர்கள் சிறப்பாக வழி நடத்தினார்.
இறுதியாக அல்ஹுதா அறக்கட்டளை உறுப்பினர்
வி சுஹைப் அவர்களின் நன்றியுரையுடன்
ஆண்டு விழா நிகழ்வு இறைவனின் அருளால்
சிறப்பாக நிறைவுற்றது.
ஆண்டு விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ&மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.