News Channel

குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள்

குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தை கொண்டாடப்பட்டு வருகின்றது. 
மக்கள் கருத்தை மாற்றி அமைக்கக்கூடிய எந்த ஒரு நிகழ்வையும் தவறவிடாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அப்படி இந்த குடியரசு தின விழாவையும் கையில் எடுத்து நடத்தப்படுகின்றது.

பல கிராமங்களில் பள்ளிவாசல்களில் கொடி ஏற்றி ஊர் மக்களை அழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதும், இன்னும் பல ஊர்களில் அரசு பள்ளிக்கூடங்களில் நடைபெறக்கூடிய குடியரசு தின விழாவில் பங்கெடுத்து உரைகள் நிகழ்த்துவதும், இன்னும் சில ஊர்களில் பள்ளிவாசலிலும் ஜமாத்தார்கள் கொடியேற்றி அந்த ஊரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்திலும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி ஊரார் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இந்த 2025 ம் ஆண்டும் குடியரசு தின நிகழ்ச்சி மிகச் சிறப்பாக கிராமப் புறங்களில் நடைபெற்றது. 

1. மக்கா நகர் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் கொடியேற்றி ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் jih- ஊழியரும் மக்கா நகர் பள்ளிவாசலின் இமாமுமான ஆலிம் முஹம்மது ஜாஃபர் தாவதி அவர்கள் குடியரசு தின உரை நிகழ்த்தினார். குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் மத்தியிலும் ஊரார் மத்தியிலும் ஒற்றுமையை வலியுறுத்தி வரை நிகழ்த்தினார் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற நிலைக்கு ஏற்றார் போல் இந்த நாட்டில் வாழக்கூடிய அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அந்த ஒற்றுமை தான் இந்த நாட்டை வலுப்படுத்தும் நாட்டு மக்களை வளமாக இருக்க வைக்கும் நாம் ஒன்றுபடுவோம் ஒன்றாக செயல்படுவோம் நல்ல கருத்துக்களை மக்களிடத்திலே பதிவு செய்வோம் போன்ற செய்திகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் , மதரஸா மாணவ மாணவிகளும் உரை நிகழ்த்தினார்கள்.

2. தீன் நகர் பள்ளிவாசலில் குடியரசு தின அன்று தேசிய கொடியை ஜமாத் தலைவர் அவர்கள் ஏற்றி பள்ளிவாசலினுடைய இமாமும் jih- ஊழியருமான மௌலவி ஜாபர் சாதிக் மன்பஈ அவர்கள் உரை நிகழ்த்தினார். இந்த நாட்டில் வாழக்கூடிய மக்கள் அனைவர்களும் ஜாதி மத வேறுபாடு இன்றி இன மொழி வேறுபாடு இன்றி அனைத்து மக்களும் சமம் என்கின்ற நிலையில் தங்களை உருவாக்கிக் கொண்டு வாழ வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்கின்ற சொல்லாடலுக்கு ஏற்ப இந்தியாவில் வாழுகின்ற அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் பட்சத்தில் நாடு செழிக்கும் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வளமாக வாழ்வார்கள் போன்ற சமூக ஒற்றுமைக்கான கருத்துக்களை அவர்கள் கூறினார். மேலும் மக்தப் மதரஸா மாணவ மாணவிகள் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 

3. அதேபோன்று ரமலான் நகரில் அரசு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் jih- ஊழியரும் பள்ளிவாசல் இமாமான மௌலவி சம்சுதீன் பைஜி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். 

4. அதே போன்று ஓடைகுளம் பகுதியில் அரசு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் jih- ஊழியரும் ஓடை குளம் பள்ளிவாசலில் இமாமும் அவர்களும் அவர் தலைமையில் உள்ளூர் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்வில் பங்கெடுத்து மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார். 

5. அதேபோல காண்டை கிராமத்தில் உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் jih-  ஊழியரும் ஜும்மா பள்ளிவாசல் இமாமான மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு சிறப்புரை நிகழ்த்துமாறு கூறினார். அவரும் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு நாட்டுப்பற்றையும் மாணவ மாணவிகளிடத்தில் இருக்கவேண்டிய நீதி, நியாயம், ஒழுக்கம், வேறுபாட்டில்லாத மனம், நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல எண்ணங்கள் இவைகள் மாணவர் மத்தியிலே உருவாக வேண்டும் என்று தங்களுடைய உரையிலே எடுத்துக் கூறினார். குடியரசு தின விழா மிக சிறப்பாக நடைபெற்றது. 

7. அதேபோன்று குராயூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் குராயூர் ஜும்மா பள்ளிவாசல் இமாமான மௌலவி அப்துல் கரீம் இனாமி அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி உரை நிகழ்த்தினார் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அவர் உரையில் நற்குணங்கள், உதவி மனப்பான்மை, நல்லொழுக்கம், இவைகள் பிள்ளைகளிடத்தில் இருக்க வேண்டும் என்கின்று  உரையில் குறிப்பிட்டார். மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. 

8. அதேபோல அணைக்கரைப்பட்டி கிராமத்தில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் அணைக்கரைப்பட்டி பள்ளிவாசல் இமாமான சர்தார் பாஷா அவர்கள் உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடத்தில் குடியரசு தின உரை நிகழ்த்தினார்.மாணவ மாணவிகள் மத்தியில் ஒற்றுமை பாகுபாடற்ற மனநிலை விட்டுக் கொடுக்கக்கூடிய குணம் சகோதரத்துவ வாஞ்சையோடு பழகக்கூடிய எண்ணம் போன்ற குணங்கள் மிளிர வேண்டும் அதுதான் சமூகத்தினுடைய வலிமை என்று அவர் கூறினார். மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

9. அதேபோன்று ஊராம் பட்டியில் உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் ஊராம் பட்டி ஜும்மா பள்ளிவாசல்  இமாமான அக்பர் இக்பால் அவர்கள் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியதோடு நல் உபதேசமும் அவர்களுக்கு செய்யப்பட்டது. மாணவ மாணவிகள் மத்தியில் ஒற்றுமையும் பாசமும்நேசமும் பாகுபாடற்ற சகோதரத்துவ எண்ணங்களும் ஒன்றுக்கொன்று உதவக்கூடிய குண நலங்களும் இருக்க வேண்டும் என்று அவர் அந்த உரையில் குறிப்பிட்டார்கள் 

10. அதேபோன்று கோடாங்கி பட்டி ஊரில் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் உறுப்பினரும் கோடாங்கி பட்டி ஜும்மா பள்ளிவாசல் இமாமான ஆலிம் அபூபக்கர் தாவூதி அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்து கொண்டு குடியரசு தின உரை நிகழ்த்தினார். அவர் உரையில் இந்திய நாட்டின் வலிமை மாணவர் மத்தியில்தான் இருக்கின்றது இந்த மாணவ சக்திகள் உருவாகின்ற பொழுது தேசத்துக்காகவும் நாட்டிற்காகவும் மாநிலத்துக்காகவும் நலம் நாடக்கூடியவர்களாக உருவாக வேண்டும்.தன்னலமற்ற உழைக்கக்கூடிய குணமும், ஒழுக்க விழுமங்களோடு உருவாக வேண்டும் அவரிடத்தில் நல்ல பழக்கங்கள் இருக்க வேண்டும் போட்டி பொறாமை குரோதமான எண்ணங்கள் மோசடித்தனம் இவைகள் அற்ற மாணவ மாணவிகளாக உருவாக வேண்டும். நேர்மை வாய்மை ஒழுக்கம் நீதி சகோதரத்துவ வாஞ்சையோடு பழகக்கூடிய குணம் போன்றவர்கள் மிளிர வேண்டும் என்று அவர்களுடைய உரையிலே குறிப்பிட்டு மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். 

இப்படி இன்னும் பல கிராமங்களில் ஆங்காங்கே இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்களில் நமது ஊழியர்கள், உறுப்பினர்கள் பங்கெடுத்து மக்கள் கருத்தை சாதகமாக மாற்றக்கூடிய அந்த குறிக்கோளை தேவைக்கேற்ப மக்கள் மத்தியில் பணிகள் நடைபெற்று வருகிறது.