தேசிய பெண் குழந்தைகள் தினம்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர் வட்டம் சார்பாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 ஆம் தேதியில் தேசிய பெண் குழந்தை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறிப்பாக , பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய பாதிப்புகளையும் அதிலிருந்து எப்படி மீள்வது போன்ற விவகாரங்களை கிராமப்புறங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே சந்தித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது, இது இந்திய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
* பெண் குழந்தைகளை காப்பாற்றுதல் ,
* குழந்தை பாலின விகிதங்கள் மற்றும்
* பெண் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும்
* பாதுகாப்பான சூழலை உருவாக்குதல்
பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் உட்பட பல நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது .
அவ்வகையில் நமது கிராமப்புறங்களில்
* பெண் குழந்தைகளுக்கு தேவையான அறிவுரைகள்
* பாதுகாப்பு முறைகள்
* ஒழுக்க விழுமங்கள்
* தன்னம்பிக்கை
* எதிர்கால திட்டம்
* ஆளுமைகளை வளர்த்துக் கொள்ளுதல்
போன்ற செய்திகளை பெண் குழந்தைகளிடத்தில் எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறோம் இச்சிறப்பு நிகழ்ச்சி தற்போது
* இராமநாதபுரம்,*மக்கா நகரில் ஊழியரும் இமாமுமான ஆலிம் முஹம்மது ஜாஃபர்* அவர்களும்
* மதுரை, *காண்டையில் ஊழியரும் இமாமுமான மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி* அவர்களும்.
* தேனி , *கோடாங்கி பட்டியில் உறுப்பினரும் இமாமுமான ஆலிம் அபுபக்கர் தஃவதி* ஆகியோர் தலைமையில்
அந்தந்த பகுதிகளில் உள்ள
பள்ளிக்கூடங்களுக்கு சென்று தலைமை ஆசிரியர் இடத்தில் இந்நாளின் அவசியத்தை எடுத்துக் கூறி பெண் குழந்தைகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டது. உடனே தலைமை ஆசிரியர்கள் இந்த நல்ல கருத்துக்களை நீங்களே குழந்தைகளுக்கு கூறுங்கள் என்று குழந்தைகளை ஒருங்கிணைக்க வைத்து அந்த குழந்தைகள் மத்தியிலே பேசப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி தேசிய பெண் குழந்தை தினத்தின் நோக்கத்தை அதிலிருந்து பெறவேண்டிய செய்திகளை அழகிய முறையில் எடுத்துரைக்கப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.