News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அறிமுகக் கூட்டம்

கிராமப்புற ஜமாஅத் நிர்வாகிகளுக்கான 
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் அறிமுகம் கூட்டம்

ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்தின் இஸ்லாமிக் சென்டர் மதுரை கீழ் இயங்கக்கூடிய

* மதுரை 
* ராமநாதபுரம் 
* விருதுநகர் 
* தேனி

ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயளாலருக்கான 
ஜமாஅத் தே இஸ்லாமி  ஹிந்து அறிமுக கூட்டம் கடந்த 21.1.2025 செவ்வாய்க்கிழமை திருச்சியில் காலை 11.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெற்றது 

இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் 
* மௌலவி ஹனிபா மன்பஈ அவர்களும், 
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மாநில துணைத்தலைவர் 
* ஐ. ஜலாலுதீன் அவர்களும், 
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் 
* மௌலவி முகைதீன் குட்டி உமரி அவர்களும், 
மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயளாலர் 
* ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இச்சிறப்பு நிகழ்ச்சியின் நோக்கம் 1980 களில் தமிழகத்தில் குறிப்பாக தென் மாநிலங்களில்
* மதுரை 
* இராமநாதபுரம் 
* விருதுநகர் 
* தேனி

ஆகிய மாவட்டங்களில் 
இஸ்லாமிய மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு தங்களுடைய வாழ்க்கை நெறியை இஸ்லாமாக மாற்றிக் கொண்ட மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் வேலூர் இஸ்லாமிக் சென்டர்.

* இஸ்லாமிய கல்வி 
* அவர்களின் குழந்தைகளுக்கு உலக கல்வி
* கிராமங்களை கண்காணிப்பதற்கும் 
* வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல 
* திருமணம் 
* வாழ்வின் அனைத்து நிலைகளிலும் துணையாக நிற்பது 

போன்ற காரியங்களுக்கு கிளையாக உருவாக்கப்பட்டதுதான் மதுரை இஸ்லாமிக் சென்டர்.  

இந்நிலையில் நான்கு மாவட்டங்களில் உள்ள சுமார் 16 கிராமங்களில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் பணிகளை முழு வீச்சாக எடுத்துச் சொல்ல வேண்டும் அதற்கு அந்தந்த ஜமாத் பொறுப்பாளர்களிடத்தில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்தின் பணிகளையும் அதன் முக்கியத்துவத்தை முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறும் வகையிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் இனி நேரடியாக அதன் பணிகளை கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும். 
கடந்த மூன்றாண்டுக்கு மேலாக கிராமப்புறங்களில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் பெயரில் நடைபெற்று வருகிறது. 
இருந்தாலும் உள்ளூர் ஜமாஅத்தின் பங்களிப்பும் அவர்களுடைய அர்ப்பணிப்போடு இனி வரக்கூடிய காலங்களில் நடைபெற வேண்டும். அதை உணர்த்தும் விதமாக உள்ளூர் ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கு  இச்சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந் நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் மௌலவி ஹனிபா மன்பஈ அவர்கள் உரை நிகழ்த்தும்போது... 
நன்றிக்கு நன்றி என்பது மனித வாழ்வில் யதார்த்தமாக கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயம் பல அழகான உவமானங்களைக் கொண்டு மனித வாழ்வில் நாம் செலுத்தக்கூடிய நன்றிகளை நினைபடுத்தினார் 

உதாரணத்திற்கு... கிராமப்புறங்களில் ஒரு திருமண வைபோகம் நடந்தால் நாம் அன்பளிப்பு (மொய்) என்கின்ற அடிப்படையில் பணம் கொடுப்போம். அதற்கு அவர்களும் திருப்பி செய்வார்கள். குறைவாக செய்ய மாட்டார்கள் அதைவிட நிறைவாக செய்வார்கள் 

வீட்டில் நடைபெறக்கூடிய காரியங்களுக்கு அன்பளிப்பாக நாம் ஒரு மூக்குத்தி வாங்கி கொடுத்தால் அதேபோன்று செய்வார்கள் அல்லது அதைவிட அதிகமாக செய்வார்கள். குறைவாக செய்ய மாட்டார்கள். 

நாம் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது வழியில் ஒருவர் நம்மை நிறுத்தி உதவி கேட்கின்ற போது நாம் அதை அவருக்கு செய்தால் திரும்ப மற்றொரு தருணத்தில் நாம் நடந்து செல்லும் பொழுது நம்மிடத்தில் உதவி பெற்றவர் நம் அருகில் வந்து உரிமையாக வண்டியில் ஏறுங்கள் என்று நாம் கேட்காமலே நமக்கு உதவி செய்வார்.  

நன்றிக்கு நன்றி இப்படி மனித வாழ்வில் பல நன்றிகளை நாம் செலுத்திக் கொண்டே இருக்கின்றோம் ஆனால் இறைவன் நமக்கு இஸ்லாம் என்கின்ற அருட்கொடையை, நேர்வழியை, பொக்கிஷத்தை, அருளை நமக்கு வழங்கி இருக்கின்றான். 
நாம் அதை அடைந்திருக்கின்றோம் அதற்கு நாம் என்ன நன்றி செலுத்தி இருக்கிறோம் வெறுமனே தொழுகை நோன்பு இவைகள் செய்தால் அது இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய வகையாகுமா ? இல்லை!
நாம் நேர்வழி அடைந்த பிறகு நம்மை ஒரு முஸ்லிம் என்று வெளிப்படுத்தக்கூடிய காரியங்கள் அவை. ஆனால்! இறைவன் நமக்கு நேர்வழி காட்டினானே அதேபோல நமக்கு கிடைத்த நேர்வழி மற்றவர்களுக்கு நம்மால் நாம் காட்டுவது தான் நன்றிக்கு நன்றி செலுத்துவது ஆகும். கிராமத்தில் இருக்கக்கூடிய பொறுப்பாளர்கள் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்றால் உங்களுடைய கிராமங்களில் இருக்கக்கூடிய மற்றவர்களுக்கு இந்த மார்க்கத்தை இந்த அருட்கொடையை இந்த அருளை நீங்கள் எடுத்துரைத்து அவர்களுக்கு நீங்கள் சேர்க்க வேண்டும் என்று அழகான முறையில் தங்களுடைய உரையில் குறிப்பிட்டார். 

அதேபோல மாநில துணைத்தலைவர் ஜனாப்: ஐ. ஜலாலுதீன் அவர்கள் இந்தியாவில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் துவங்கப்பட்ட கால முதல் தற்போது வரை நடைபெற்ற பணிகளை பவர்பாயிண்ட் மூலம் எடுத்துரைத்தார்.

* ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் கொள்கை, கோட்பாடுகள் 
* வழிமுறைகள் 
* நடைபெற்று வரும் பணிகள் 
* உறுப்பினர், ஊழியர்களுக்கு தரப்படக்கூடிய பயிற்சிகள் 
* பொது சேவைகள் 

அனைத்து விஷயங்களையும் மிக அழகிய முறையிலே விளக்கினார். 

அது மட்டுமல்ல ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் 
அகில இந்திய அளவில் செயல்பட்டு வரும் 

* நிறுவனங்கள் 
* பள்ளிக்கூடங்கள் 
* மருத்துவமனைகள் 
* வட்டி இல்லா நிதியங்கள் 
* ஆசிரியர் குழு 
* சட்ட நிபுணர்கள் குழு 
* சமூகத்தில் ஒன்று இணைக்க கூடிய குழு 

இப்படி இந்தியாவில் எந்தெந்த துறைகள் எல்லாம் இயங்கிக் கொண்டிருக்கிறதோ அத்தனையும் மிக தெளிவான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். 

நிகழ்ச்சியின் முன்னதாக மாநில செயலாளர் மற்றும் மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் துவக்க உரையாற்றினார். 

இறுதியில் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளரும் மற்றும் மண்டல அமைப்பாளருமான ஜனாப் : நஜீர் உசேன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியுரை கூறி துவாவோடு நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

வருகை புரிந்த அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்து மன மகிழ்வோடு அனைவரும் கலைந்து சென்றனர். 
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!