News Channel

"CIO Olympics"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி நடத்திய CIO Olympics விளையாட்டுப் போட்டிகள் நேசம் மக்கள் நல சேவை மைய திடலில் 17.01.25 வெள்ளியன்று நடைபெற்றது. 
30க்கும் மேற்பட்ட போட்டிகளில் சுமார் 90க்கும் மேற்பட்ட குழந்தைகளும், 35க்கும் மேற்பட்ட GIO மாணவிகளும் கலந்து கொண்டனர். 

மேலும் நிகழ்ச்சியை CIO பொறுப்பாளர் சகோதரி நிஹ்மத் ஹசீனா தலைமையேற்று நடத்த, 
GIO பொறுப்பாளர் சகோதரி புதுரா பஜிலா வரவேற்புரை ஆற்ற,
தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தென்மண்டல தலைவரும், 
சமூக
நல்லினக்க பேரவையின் கௌரவத் தலைவரும் லயன்.சுபேதார். V.மகாராஜன் அவர்கள் விளையாட்டு வீரர்களின் பேரணியை துவக்கி வைக்க, மாநகர ஜமாத் தலைவர் சர்புதீன் அவர்கள் GIO கொடி ஏற்றி வைக்க, அகில இந்திய திருணாமுல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஹக்கிம் அவர்களும், கலைஞர் நூலக நிர்வாகியும், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினருமான ஜெயபிரகாஷ் அவர்களும், அரசு சார்நிலை கருவூல கணக்கரும் TNPSC பயிற்றுணருமான கவிஞர் ஷர்ஜிலா பர்வீன் யாக்கூப் அவர்களும்,
 கம்பம் டைனிபார்க் கிட்ஸ் பிளே ஸ்கூலின் தாளாளர் மஹசபின் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

சமூக நல்லிணக்க பேரவை கௌரவ தலைவர் ஹபிபுல்லாஹ், வெல்ஃபேர் கட்சியின் மாவட்ட தலைவர் முகமது சபி உள்ளிட்ட  பெரியோர்கள் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி மகிழ்தனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் பரிதா அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது