11/07/1446 (12/01/2025)
ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 மணி முதல் இரவு இஷா தொழுகை வரை
அல்லாஹ்வின் அருளால்
தேனி மாவட்ட ஆலிம்களை சந்தித்தோம்.
முதலாவதாக முத்து தேவன் பட்டியில் உள்ள அல்பலாஹிய்யா மதரஸாவின் ஆசிரியர்களை சந்தித்தோம். பிறகு சின்னமனூர், கோட்டூர் ஆலிம்களை சந்தித்தோம்.
அடுத்து
தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃப் பாகவி அவர்களை சந்தித்தோம். பிறகு கம்பத்தில் உள்ள அத்தாயீ மதரசாவினுடைய முதல்வர், ஆசிரியர்களை சந்தித்தோம்.
அடுத்து கம்பத்தில் உள்ள தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாவின் துணைத் தலைவர் மௌலவி அலாவுதீன் மிஸ்பாஹி ஹஷரத் அவர்களை சந்தித்தோம். அதன் பிறகு உத்தமபாளையம் அஸ்ஹாபுஸ்ஸூfப்பா மதரஸாவின்
பொறுப்பாளர், உத்தமபாளையத்தின் ஜமாத்துல் உலமாவின் பொறுப்பாளர்களையும் சந்தித்தோம்.
அடுத்து மகரிப் தொழுகைக்கு பின்னால் தேனி மாவட்ட ஜமாத்துல் உலமாவின் செயலாளர், பொருளாளர் மற்றும் முக்கிய ஜமாத்துல் உலமாவின் பொறுப்பாளர்களையும் சந்தித்தோம். அனைவருக்கும் மாநாட்டை அறிமுகம் செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது சந்தித்த ஆலிம்கள் அனைவரும் வருவதாக வாக்களித்துள்ளார்கள்.
கலந்து கொண்டவர்கள்
மௌலவி அஹ்மத் முஹைதீன் ஃபைஜி,
மௌலவி அபூபக்கர் உமரி, மௌலவி ஹபீபுல்லாஹ் யூசுஃபி, தேனி மாவட்ட JIH பொறுப்பாளர் அபுதாஹிர், அப்துல் காதர் பாஷா, சின்னமனூர் சாதிக், பாளையம் பொறுப்பாளர் முகம்மது இக்பால் ஆகியோர்கள் ஆலிம்களை சந்திப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்து தந்தார்கள்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!!
அல்லாஹ் நமது தூய எண்ணங்களை பணிகளை ஏற்றுக் கொள்வானாக!!!