News Channel

இரத்த தான முகாம்

இறை இல்லம் இரத்ததான இல்லாமாக...

திருப்பூர் சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பாக இன்று 12.01.2025 திருப்பூர் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் தன்னார்வ இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்வை சாலிடாரிட்டி 
தமிழ் நாடு மாநிலத் தலைவர் 
சகோதரர் கமாலுதீன் அவர்கள் 
துவக்கி வைத்தார். 

குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு திருப்பூர் அரசு பொது மருத்துவமனை சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

40க்கும் மேற்பட்ட தன்னார்வ இரத்த கொடையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். 

சாலிடாரிட்டி திருப்பூர் மாவட்டத் தலைவர் இஸ்மாயில் உட்பட அனைத்து  ஊழியர்களும் இந்நிகழ்வை திறம்பட ஏற்பாடு செய்து வழிநடத்தினர். 

மேலும் 
ஜமாஅத்தே இஸ்லாமி திருப்பூர் 
உறுப்பினர்கள் ஊழியர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தனர். 

வருகை தந்த அனைத்து மருத்துவர்களுக்கும் இஸ்லாமிய நூல்கள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

இறுதியாக 
திருப்பூர் அரசு மருத்துவமனை சலிடாரிட்டி இளைஞர் அமைப்புக்கு பாராட்டு சான்றிதழ்
வழங்கியது.

சகோதர சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களும்
பள்ளிவாசலில் இரத்த தான நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.