News Channel

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தமிழ்நாடு சார்பாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முகாம், 21 டிசம்பர் 2024 அன்று திருச்சியில் நடைபெற்றது.

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு தமிழ்நாட்டின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் முகாம், சனிக்கிழமை (21/12/24) அன்று ஒருநாள் நடைபெற்றது.

இந்நிகழ்வு சாலிடாரிட்டி தமிழ்நாடு தலைவர் சகோ. கமாலுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் காப்பாளரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி. ஹனீஃபா மன்பஈ அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

தொடர்ந்து ஜமாஅத் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் ஜனாப். I. ஜலாலுதீன் அவர்களும், செயலாளர் ஜனாப். ஹஜ் முஹைதீன் அவர்களும் பயிற்சிகள் வழங்கினர்.

மேலும் திருச்சி மண்டல அமைப்பாளர் ஜனாப். சையத் முஹம்மது அவர்களும், ராபிதத்துல் உலமா செயலாளர் மௌலவி. அப்துல் ஹசீப் பாகவி அவர்களும், சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு தமிழ்நாடு செயற்குழு உறுப்பினர் மௌலவி. முஹம்மது நாசர் புகாரி ஆகியோரும் பயிற்சி வழங்கினர். 

தலைமைத்துவ பயிற்சியை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இம்முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

அல்ஹம்துலில்லாஹ்.