News Channel

கோவை மாநகரின் புதிய காவல்துறை ஆணையரை மரியாதை நிமித்தமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை தலைவர்கள் சந்திப்பு

கோவை மாநகரின் புதிய காவல்துறை ஆணையராக மரியாதைக்குரிய திரு. A. சரவண சுந்தர் IPS அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.

இன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்களின் தலைமையிலான கோவை நிர்வாகிகள் கோவை காவல்துறை ஆணையர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கோவை மாநகரை மென்மேலும் வளர்ச்சிக்கான பாதையில் திரு. A. சரவண சுந்தர் IPS அவர்கள் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதற்கான ஒத்துழைப்பை ஜமாஅத் நல்கும் என்றும் வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளும் தெரிவிக்கப்பட்டது.

பெரு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட காவல் ஆணையர் அவர்கள் தொடர்ந்து ஜமாஅத்தின் மக்களுக்கான அனைத்துப் பணிகளிலும் காவல்துறையின் ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தெரிவித்தார்.