News Channel

சிறப்பு நிகழ்ச்சி - இன்றைய சூழலும் முஸ்லிம்களின் பொறுப்புகளும்

இன்றைய சூழலும் முஸ்லிம்களின் பொறுப்புகளும் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி இன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பின் ஓசூர் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு ஒசூர் வட்டப் பொறுப்பாளர் முஹம்மது ஆரிப் தலைமை தாங்கினார். 
மினா பள்ளி இமாம் மௌலவி முஹம்மது சிராஜ் காஷிமி கிராஅத் ஓதினார். ( அல் பகறா 2: 153-163) . அதை முஹம்மது ஆரிப் தமிழில் மொழிபெயர்த்தார். முஹம்மது அலி அனைவரையும் வரவேற்றார்.

 முஹம்மது ஆரிப் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார் மேலும் சிறப்பு பேச்சாளர் டாக்டர் மொய்தீன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். 

சிறப்புரை வழங்கிய டாக்டர் மொய்தீன் அவர்கள் இன்றைய சூழலை படம் பிடித்துக் காட்டினார். 
அதே சமயம் இந்த நிலை கண்டு நிராசை அடைய தேவை இல்லை என்பதை குர்ஆன் மற்றும் நபி அவர்கள் வாழ்வின் மூலம் தெளிவு படுத்தினார். முஸ்லிம்கள் பொறுப்புகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டார். 
நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதிலுக்கு நேரம் அளிக்கப்பட்டது.இதில் இரண்டு பேர் கேள்வி கேட்டு தெளிவு பெற்றனர்.

 நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் ஜாகிர் உசேன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. 
ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.