News Channel

இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

இராமநாதபுரம் ரமலான் நகரில் இளைஞர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் மௌலவி முஹம்மது ஹனிபா மன்பஈ அவர்கள் வருகை புரிந்தார்கள். 

ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலவி சம்சுதீன் ஃபைஜி அவர்கள் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அழகுற வழிநடத்தி அமைத்துக் கொடுத்தார். 

ரமலான் நகர் ஜமாத் தலைவர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். 
மற்றும் ரமலான் நகர் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். 

கடந்த மாதம் அக்டோபரில் நடைபெற்ற ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மாநில தலைவர் அவர்கள் இளைஞர்களுடைய பணிகளையும் அவர்களுடைய ஒத்துழைப்பையும் பார்த்து தொடர்ந்து ரமலான் நகரில் மௌலவி சம்சுதீன் அவர்கள் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் பணிகளை மேற்கொண்டு இளைஞர்களை வழி நடத்தி வருகிறார். அவ்வகையில் இளைஞர்களை பிரத்யோகமாக சந்தித்து சமூக பொறுப்பையும், அக்கறையையும் அவர்களிடத்தில் புரிய வைப்பதற்கு ஒரு அமர்வை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாநில தலைவர் அவர்கள் கூறியிருந்தார்கள் அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை இரவு இளைஞர்கள் மற்றும் சங்கத்தினர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

சனிக்கிழமை 2.11.2024 இரவு எட்டு முப்பது மணி அளவில் தொடங்கி 10 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

இளைஞர்கள் ஜமாத்தார்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டார்கள் அவர்கள் மத்தியில் மாநில தலைவர் மௌலவி ஹனிபா மன்பஈ அவர்கள் உரை நிகழ்த்தினார். 
உரையில் கூறுகையில்... எனக்கும் ரமலான் நகருக்கும் இருக்கக்கூடிய தொடர்பு என்பது 1984 முதல் இன்று 2024 வரை தொடர்பு நெருக்கமாகவே இருந்து வருகிறது. ரமலான் நகரில் கூரை பள்ளிவாசலாக இருக்கும் பொழுதும் பள்ளிவாசலே இல்லாத பொழுதும் இங்கு வருவதும் போவதுமாக என்னுடைய பயணம் இருந்து வருகின்றன. 
உங்களுடைய தகப்பனார் உங்கள் தகப்பனாரின் தகப்பனார் ஆகியோரும் எனக்கு அறிமுகம் இருக்கின்றன அவர்களுடைய சந்ததிகளாகிய உங்களை பார்க்கின்ற பொழுது நான் பெருமிதம் கொள்கிறேன் மகிழ்ச்சி அடைகின்றேன் இந்த கூட்டம் என்பது வெறுமனே சந்திப்பதற்கான கூட்டம் அல்ல உங்களுடைய மூதாதையர்கள் இஸ்லாத்தை ஏற்றது அவர்கள் செய்த பாக்கியம் அவர்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம் அவர்கள் மூலமாக பிறப்பிலேயே நீங்கள் முஸ்லிமாக பிறந்தது நீங்கள் செய்த பாக்கியமும் உங்களுக்கு கிடைத்த பொக்கிஷமும் என்று நீங்கள் கருத வேண்டும் நான் அப்படி தான் கருதுகிறேன். 

இந்த சூழ்நிலையில் இளைஞர்கள் சங்கம் என்று சேர்ந்து நீங்கள் பல நற்காரியங்களை செய்கின்றீர்கள் நல்ல பணிகளில் ஈடுபடுகின்றீர்கள் உங்களுக்கு இமாம் அவர்கள் அவ்வப்போது வழிகாட்டுதல் வழங்குகின்றார்கள் பயான்கள் நடைபெறுகின்றன மார்க்கத்தினுடைய செய்திகள் தெரிகின்றது. ஆனாலும், தற்போது இருக்கக்கூடிய காலம் என்பது மிக மோசமான சைத்தானிய ஆதிக்க மிக்க காலமாக இருந்து வருகின்றது. உங்களை எந்த தருணத்தில் வழி கெடுப்பது என்பதை அவன் கங்கணம் கட்டி அலைந்து திரிக்க கூடிய காலத்தில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பொறுப்புகளையும் நீங்கள் இனி செய்ய வேண்டிய பணிகளையும் உங்களிடத்தில் நினைவு கூறுவதற்கு நான் விரும்புகின்றேன். 

வெறுமனே சங்கத்தை வைத்து சங்கத்திலே சில பணிகளை எடுத்து செய்வதோடு உங்களுடைய கடமைகள் முடிந்து விடுவது அல்ல அதை கடந்து சமூக மாற்றம் சமூக சீர்திருத்தம் சமூக பணி இஸ்லாமிய பணிகள் மார்க்கத்தை நிலை நாட்டக் கூடிய மாபெரும் பொறுப்பு உங்கள் பகுதியில் தீனை நிலைநாட்ட கூடிய பொறுப்பு இவைகளை நீங்கள் உணர வேண்டும். 
இல்லையென்றால் சைத்தான் அவனுடைய வழியை உங்களுக்கு அழகாக காட்டி திசை திருப்பி உங்களை இழுத்துச் சென்று விடுவான். 
ஒவ்வொரு ஊரின் இளைய தலைமுறை தான் அடுத்த தலைமுறையாக உருவாகும்.  
நீங்கள் உருவாகுவது மிகச்சிறந்த தலைமுறையாக பிறருக்கு முன்னோடிகளாக முன் உதாரணமாக நீங்கள் மாற வேண்டும் அதற்கு நீங்கள் இஸ்லாத்தோடும் இஸ்லாமிய பணிகளோடும் ஜமாஅத் தோடும்  என்றைக்குமே இணைந்திருக்க வேண்டும் என்றும். 

இன்னும் பல பொறுப்புகளையும் எடுத்துக்காட்டுகளையும் உதாரணங்களையும் மனித சமூகத்திற்கு எதிராக இருக்கக்கூடிய சூழ்ச்சிகள் இவைகளிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அழகிய முறையில் எடுத்துரைத்தார்கள் இறுதியில் ரமலான் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மவுலவி சம்சுதீன் ஃபைஜி அவர்கள் துஆ ஓதி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.