அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹ்.........
அல்லாஹ்வின் அளப்பெரும்
அருளால் 04/04/1446 ஹிஜ்ரி (08/10/2024) செவ்வாய்க்கிழமை காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை ராபிததுல்
உலமா திருச்சி வட்டத்தின் சார்பாக மாதாந்திர தர்பிய்யா மற்றும் ஆலோசனைக் கூட்டம் இலாஹி
பள்ளிவாசலில் நடைபெற்றது.
தொடக்கமாக மௌலவி.
முஹம்மது ஆஷிக் முனீரி அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி ஆரம்பம் செய்தார்.
தொடர்ந்து மாநிலச்
செயலாளர் மௌலவி அஹமது முஹ்யித்தீன் ஃபைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து
ஆலிம்கள் பல்வேறு விளக்கங்களை கேட்டுத்
தெளிவு பெற்றனர்..
கலந்துரையாடலைத் தொடர்ந்து
ராபிதாவின் மாநில செயற்குழு முடிவுகளின் முக்கிய அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.
வெள்ளி மேடை தளம்
அறிமுகப்படுத்தப்பட்டது.
சமரசம் வாசகர் தளம்
குறித்து விளக்கப்பட்டது.
மண்டல பொறுப்பாளர்கள்
நியமனம் குறித்து பதிவு செய்யப்பட்டது.
ஜனவரி 28/2025 இல் நடைபெறக்கூடிய மாநிலம் தழுவிய ஆலிம்கள் ஒற்றுமை
மாநாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்த மாதாந்திர
கூட்டத்தின் போது மாநில ஆலிம்கள் ஒற்றுமை மாநாடு குறித்த ஆலோசனை (மாநில மாநாடு கமிட்டி
முடிவுகளின் அடிப்படையில் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
இறுதியில் துஆவுடன்
கூட்டம் இனிதே நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ் ..... எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே
..........