தேசிய அளவிலான பரப்புரை ஒழுக்கமே சுதந்திரம்
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் நாடு தழுவிய அளவில் நடத்தி வரும் ஒழுக்க கேட்டுக்கு எதிரான "ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை அதன் ஒரு பகுதியாக சாயல்குடி அருகில் உள்ள ஓடைக்குளம் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்தி வரும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையை ஓடைக்குளம் ஜமாஅத்தார்களோடு இணைந்து கடந்த 3. 9. 2024 வியாழக்கிழமை மாலை 6:00 மணி முதல் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான மௌலவி, முஹைதீன் குட்டி உமரி அவர்களும்
ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளருமான ஜனாப் ; நஜீர் ஹுசைன் அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மதினா நகர் ஜும்மா பள்ளிவாசல் இமாம் ஆலிம் முஹம்மது ரபிக் தஃவதி அவர்கள் இறைமறை வசனத்தை ஓத
ஓடைக்குளம் ஜமாத் தலைவர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்ற
இந்நிகழ்ச்சிக்கு ஓடைக்குளம் ஜமாத் செயலாளர் நன்றி உரையாற்ற
இந்நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வழி நடத்திய ஓடைகுளம் ஜும்மா பள்ளிவாசலின் இமாமும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியருமான மௌலவி ,ஆதம் அலி ஃபைஜி அவர்கள் வழிநடத்த இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று நடத்தி தந்த மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் தலைமை உரையில் கூறும் போது ஒவ்வொரு காலச் சூழலுக்கும் ஏற்ப ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் பல பரப்புரைகளை மேற்கொண்டு மனித சமூகத்திற்கு வழிகாட்டி வருவதை அனைவரும் அறிந்த அறிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கின்றது.
எப்பொழுது ஒரு குற்றம் சமூகத்தில் மிகைத்து காணப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம்
மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்வதை கடமையாக மனித சமூகத்துக்கு செய்கின்ற தொண்டாக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் தொடர்ந்து இந்தியாவிலே நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.
அவ்வகையில்தான் இந்திய சூழலை கவனித்து பார்க்கின்ற பொழுது ஒழுக்கக்கேட்டினுடைய அனைத்து நிலைகளிலுமே இன்றைக்கு மனித சமூகம் மிக விரைவாக செயல்படுவதை பார்த்து இந்த ஒழுக்கக்கேடான செயல் மனித குலத்துக்கு பெரும் ஆபத்தாக விளைந்திருப்பதை விளங்கி நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது.
- பாலியல் ரீதியாக சரி
- வாழ்வியல் ரீதியாக சரி
- தனிமனித ரீதியா ரீதியாக சரி
- இளைஞர்கள் மத்தியில்
- இளைஞர்கள் மத்தியில்
- ஏன் சிறார்கள் மத்தியில் கூட ஒழுக்க கேட்டுனுடைய பாதிப்பு தென்படுவது அனைவரும் அறிந்த ஒரு செய்தி.
இந்த சிந்தனையை அப்படியே விட்டுவிட்டால் இருக்கின்ற மனித சமூகம் சரி இனி வர இருக்கின்ற அடுத்த சந்ததிகளும் சரி ஒழுக்க கேட்டையே தவறு என்பதை கூட உணராத மனித சமுதாயமாக மாறிவிடக்கூடிய அபாயத்தை உணர்ந்து ஒழுக்கம் தான் மனிதனுடைய சுதந்திரம் ஒழுக்கத்தின் மூலம் தான் மனிதர்கள் மனிதர்களாக வாழ முடியும் ஒழுக்கத்தை கடைபிடிக்கவில்லை என்றால் சுதந்திரம் என்கின்ற பெயரிலே மிருகத்தை விட கேவலமாக வாழ்வார்கள், வாழ்கிறார்கள் அதற்கான அடையாளங்கள் எல்லாம் இவை இவை என என்று தங்களுடைய தலைமை உரையிலே கூறி ஒழுக்க கேட்டுக்கு எதிரான இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக ஓடை குளத்தில் நடைபெறுகிறது என்பதை அவர்கள் கூறினார்.
இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிறப்புரை ஆற்றுவதற்காக வருகை புரிந்த
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளருமான மௌலவி, முஹைதீன் குட்டி உமரி அவர்கள்
ஒழுக்கத்தை போதித்த உத்தமர் என்கின்ற தலைப்பில் உரையாற்றினார் அவர் தங்கள் உரையில் வாயிலாக கூறுகின்ற பொழுது நபிகள் நாயகம் அவர்கள் ஒழுக்கத்தை போதித்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
மனிதர்கள் எப்படி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்பதை மக்களுக்கு வெறும் உபதேசமாக போதனையாக நபிகள் நாயகம் அவர்கள் ஒருபோதும் சொல்லாமல். மக்களிடத்தில் சொல்கின்ற பொழுது அதை தன்னுடைய வாழ்வில் நடைமுறை காண்பித்து எதைச் சொன்னார்களோ அதன் அடிப்படையில் தங்களுடைய வாழ்வை அமைத்துக் காட்டிய உலகத் தலைவர்களில் சிறந்தவர் நபிகள் நாயகம் அவர்கள். அவர்கள் கூறிய போதனைகளை பட்டியலிடுகின்ற பொழுது நபிகள் நாயகம் அவர்கள் ஒரு முறை இப்படி கூறினார்கள் உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் மனிதர்களிடத்தில் சிறந்தவர் என்று கூறினார்.
உங்களுடைய உள்ளத்தைத் தொட்டு இறைவனுக்கு பயந்து உங்கள் மனைவியிடத்தில் நீங்கள் சிறந்தவர்களாக இருக்கிறீர்களா என்று மக்களை பார்த்து கேட்கின்ற பொழுது அந்த ஒரு வார்த்தையிலேயே நபிகள் நாயகம் அவர்கள் உலக சமுதாய மக்களுக்கு முன்பாக எவ்வளவு ஒழுக்கத்தை பேணி நடந்தார் என்பதற்கு சாட்சியாக இருந்தது. உண்மைதான் கணவன் தன் மனைவியிடத்தில் சென்று உண்மையாக மனசாட்சியோடு இறைவனுக்கு பயந்து கணவனாகிய நான் உன்னிடத்தில் சிறந்தவனாக இருக்கிறேனா என்று கேட்டால் எத்தனை விழுக்காடுகள் தன்னுடைய மனைவியிடத்தில் ஆம் என்னிடத்தில் நீங்கள் சிறந்தவன் என்று கணவன்மார்கள் பெயரை வாங்குவார்கள்!
அதேபோல் நபிகள் நாயகமுடைய வாழ்வை பார்த்தோம் என்று சொன்னால்
* குடும்ப வாழ்விலும் சரி
* சமூக வாழ்விலும் சரி
* தனிமனித வாழ்விலும் சரி
* பொருளாதாரத்திலும் சரி
* வாக்குறுதியிலும் சரி
* வாய்மையிலும் சரி
அவர்கள் மிகத் தூய்மையாக வாழ்ந்தார்கள் என்று நபிகள் நாயகமுடைய வாழ்வை, வாழ்வில் நடந்த நிகழ்வை மனிதனுடைய ஒவ்வொரு செயலோடும் ஒப்பீடு செய்து ஒழுக்கத்தை போதித்த உத்தமர் நபிகள் நாயகம் என்கின்ற தலைப்பில் மிக சிறப்பாக உரையாற்றினார்.
நிறைவும் / விருந்தும்
இறுதியாக ஓடைக்குளம் முஸ்லிம் ஜமாத் சார்பாக நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு துஆ உடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.