ஒழுக்கம் சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி
சாயல்குடி அருகிலுள்ள சிக்கல் மதினா நகர் பகுதியில் ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திவரும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
பரப்புரையின் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியின் மதினா நகரில் கடந்த 2.10.2024 புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் மண்டல அமைப்பாளரும் மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளருமான ஜனாப் : நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி , அபுசெளத் அஹமத் ஸலாமி அவர்கள் கிராத் ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
மதினா நகர் ஜமாஅத் தலைவர் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் மதினா நகர் ஜும்ஆ பள்ளிவாசல் இமாமான ஆலிம் முஹம்மது ரபீக் தஃவதி அவர்கள் ஏற்பாடு செய்து வழிநடத்தினார்.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ஜனாப் ; நஜீர் ஹுசைன் அவர்கள் ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் உரையில் கூறியதாவது மனித சமூகத்தில் அறம் இல்லாத சமூகமாக பெருகி வருவதையும் அதன் மூலமாக சமூகத்தில் நடக்கக்கூடிய அவலத்தையும் தனி மனிதனிலிருந்து கூட்டு வாழ்வு வரை ஒழுக்கச் சிதைவின் விளைவை பரவலாக காண முடிவதையும் மேற்கோள் காட்டி
ஒழுக்க சிதைவால்
ஒழுக்க கேட்டால் இன்றைக்கு தனி மனிதனில் தொடங்கி
குடும்பத்தில் பாதிப்படைந்து
சமூகம் சீரழிவதையும்.
பாலியல் ரீதியாகவும்
ஒழுக்க ரீதியாகவும்
பண்பாடு ரீதியாகவும்
சமூகம் சீரழிந்து வருவதை பட்டியலிட்டார்.
இந்த ஒழுக்க சிதைவின் பேராபத்திலிருந்து மனித சமூகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால் மூன்று நிலைகளை கையாள வேண்டும்
* ஒன்று இறைவனுக்கு முன்பாக ஒழுக்கம் உள்ளவனாக மாற வேண்டும்
* இரண்டாவதாக பிறர் முன்பாக ஒழுக்கம் உள்ள செயலை கடைபிடிக்க வேண்டும்
* மூன்றாவதாக தனி மனிதனாக தனக்குத்தானே ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும்
என்று மூன்று நிலைகளையும் கையாள வேண்டிய வழிமுறைகளையும் மிகச் சிறப்பாக எடுத்துக் கூறினார்.
இறுதியாக ஒழுக்க சிதைவு
பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளும்
வாழ்வியல் ரீதியான ஒழுக்க கேடுகளும்
பேராபத்தாக மனித சமூகத்துக்கு முன்பு நிற்பதை நினைவுபடுத்தி.
ஒழுக்கக்கேட்டில் இருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்றால் இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்கின்ற இறை அச்சத்தை மனித சமூகம் தங்களுக்குள் வளர்த்திக் கொள்ளாவிட்டால்!
ஒழுக்கக்கேட்டில் இருந்து யாரும் மீள முடியாது என்கின்ற அபாயத்தை கூறி
இறையச்சத்தோடு வாழ்ந்து
ஒழுக்கமுள்ள சமூகமாக வளர்ந்து
ஒழுக்கமுள்ள சமூகத்தை உருவாக்கக்கூடிய
அரும் பணியில் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என்று அவர் உரையின் வாயிலாக எடுத்துக் கூறினார்.
மதினா நகர் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக துவாவோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.