இராமநாதபுரம் கோட்டையந்தல் பகுதியில் ஒழுக்கமே சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 1.10.2024 செவ்வாய்க்கிழமை மாலை ஆறு முப்பது முதல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்தி வரும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கோட்டை யேந்தல் பகுதியில் சிறப்பு நிகழ்ச்சியாக ஒழுக்கமே சுதந்திரம் தலைப்பில் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் கோட்டை யேந்தல் ஜும்ஆ பள்ளிவாசல் இமாம் ஆலிம் அப்துல் ரகுமான் தாஃவதி அவர்கள் ஏற்பாடு செய்ய
கோட்டை யேந்தல் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியரும் மதினா நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இமாம் ஆகிய ஆலிம் முஹம்மது ரபிக் தாஃவதி அவர்கள் வருகை புரிந்தார் அவர் ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் உரையில் கூறியதாவது... ஒழுக்கம் என்பது அவரவர்கள் சுதந்திரத்தின் அடிப்படையில் வாழ்வது அல்ல ஒழுக்கத்திற்கு என்று வரைமுறைகளை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் வாழ்வதுதான் ஒழுக்கம்.
இன்றைக்கு மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களிடத்தில் ஒழுங்கீன செயல்கள் மேலோங்கி இருக்கிறது என்று சொன்னால் அதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது பெற்றோர்கள் !
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சரியான
* வழிகாட்டுதல்களை
* போதனைகளை
* பாதைகளை வழங்கி
பிள்ளைகளுக்கு ஒழுக்கம் என்றால் என்ன சுதந்திரம் எந்த அளவுக்கு செயல்களில் கடைபிடிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி
உதாரணமாக! ஒரு பெண் தன்னை முழுமையாக ஹிஜாப்போடு இருக்கின்றாள் மற்றொரு பெண் நவனாகரிகத்தின் வெளிப்பாடாக உடைகளை உடுத்தி இருக்கின்றார் என்றால் இந்த இரண்டு பெண்களில் யார் எந்த பெண்ணை மற்றவர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் ? யார் நவநாகரிகத்தின் அடிப்படையில் உடைகளை உடுத்தி இருக்கின்றாரோ அந்த பெண்ணைத்தான் பார்ப்பார் அப்படியானால் அந்த உடைகளை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெற்றோர்கள் தான் ஆக பெற்றோர்களிடத்தில் தான் பிள்ளையினுடைய ஒழுக்கமும் அவருடைய பாதுகாப்பும் இருக்கிறது என்பதை அவருடைய உரையில் பல உதாரணங்களோடு எடுத்துக் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டை யேந்தல் ஜமாஅத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள் நிறைவாக துஆவோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.