மணப்பாறை செப்டம்பர் 28 2024
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் முன்னெடுத்துள்ள
ஒழுக்கமே சுதந்திரம் எனும் பரப்புரையின் ஒரு பகுதியாக மணப்பாறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) மகளிர் குழுவின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக மணப்பாறை கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் கலந்து கொண்டார்கள் .
மேலும் திருச்சி மண்டல பொறுப்பாளர் ஜானப் சையது முகமது
அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முகமது அமீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மணப்பாறை பகுதியைச் சார்ந்த கண்ணியத்திற்குரிய சகோதரி ஷோபனா அவர்கள் (ஹோமியோபதி மருத்துவர்)
விழாவில் கலந்து கொண்டார்கள்.
மண்டல பொறுப்பாளர் சையத் முகமது அவர்கள் ஒழுக்கமே சுதந்திரம் இன்னும் தலைப்பில் மகளிருக்கு விழிப்புணர்வு உரையாற்றினார்.
சகோதரி ஷோபனா அவர்கள் பெண்களுக்கான சுதந்திரமும் பாதுகாப்பும் குறித்த தற்போதைய சூழ்நிலை குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர் ஜனாப் முகமது அமீன் (சமரசம் இதழின் ஆசிரியர்) அவர்கள் பெண்கள் தற்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றை தவிர்ந்து கொள்வதற்காக குர்ஆன் கூறும் நெறிமுறைகள் குறித்தும் குர் ஆன் அடிப்படையில் அமையப்பெற்ற வாழ்க்கை பெண்களுக்கான முழு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் கொடுக்கும் என்பது குறித்து அழகான முறையில் தெளிவாக உரையாற்றினார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் கலந்தது கொண்ட கட்டுரை போட்டியின் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவின் நிறைவில் JIH கிளையின் தலைவர் ஜபருல்லா அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சிகள் சுமார் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் சகோதர சமுதாயங்களை சார்ந்த மகளிர்சொந்தங்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியானது சுமார் ஏழு மணி அளவில் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இனிதே நிறைவு பெற்றது.