News Channel

மகளிர் கருத்தரங்கம்

"ஒழுக்கமே சுதந்திரம்"

மாபெரும் பெண்கள் கருத்தரங்கம்.

இன்று 30.09.2024
திங்கள் 
காலை 10:30 மணியளவில் 
வெங்கடேஸ்வரா நகர் 
கே கே அம்மன் திருமண மண்டபத்தில் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் 
மகளிர் அணி சார்பாக 
ஒழுக்கமே சுதந்திரம்
என்ற மையக் கருத்தில் பெண்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாவட்டத் தலைவர் 
S. சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மகளிர் அணி பொறுப்பாளர் 
ஹம்ஸா பேகம் அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார்.

இக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக 
தன்முனைப்பு பேச்சாளர் 
J.சுல்தானா பர்வின் அவர்களும் 

கல்வியாளர் M. சலீம் அவர்களும் கலந்து கொண்டு 
கருத்துரை வழங்கினார்கள்.

இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு 
GIO மாணவிகள் தயாரித்த 
ஒழுக்கமே சுதந்திரம் 
குறும் படம் வெளியிடப்பட்டது.
குறும்படத்தை அனைவரும் 
பெரும் எதிர்பார்ப்புடனும் ஆவலுடன் பார்வையிட்டார்கள்.

ஒழுக்கமே சுதந்திரம் 
குறும் படம் மற்றும் கட்டுரைகள்  எழுதிய மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார்கள்.

சகோதரி 
ஸம்சியா பானு அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

சகோதரி
பெனாசிர் நிஷா 
அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு 
உறுப்பினர்கள் ஊழியர்கள் ஆதரவாளர்கள் 
மற்றும் 
900-க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

தகவல்:
JIH Tirupur Media team.