News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சங்கராபுரம் மகளிர் அணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சங்கராபுரம் மகளிர் அணி சார்பாக "ஒழுக்கமே சுதந்திரம்" பரப்புரையின் ஒரு அங்கமாக (26.09.2024) வியாழக்கிழமை மதியம் 2.30 மணி அளவில் சங்கராபுரம் மேட்டு தெருவில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் அரங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜமாத்தின் ஊழியர் ஷமினா திருக்குர்ஆன் கூறும் ஒழுக்க விழியுங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

தொடர்ந்து வட்ட பொறுப்பாளர் சகோதரி ஃபஸீலத் பானு அவர்கள் ஒழுக்கத்தால் உயர்ந்த பெண்மணிகள் என்ற தலைப்பில் அன்னை ஆசியா (அலைஹிஸ்ஸலாம்) அன்னை மர்யம் (அலைஹிஸ்ஸலாம்), அன்னை கதீஜா (ரலியல்லாஹு தஆலா அன்ஹா) ஆகியோரின் சிறப்புகளைப் பற்றி எடுத்துரைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சங்கராபுரம் மண்டல அமைப்பாளர் சகோ. அப்துல் ஹமீது கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,   

மேலும் தனது சிறப்புரையில், 

*இன்றைய ஒழுக்க சீர்கேட்டின் நிலைமை, 

*ஒழுக்க சீர்கேட்டை சரி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் முஸ்லிம்களுக்கு இருக்கிறது என்றும், 

* நபிமார்கள் தீமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் என்றும், 

* நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒழுக்கமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்கினார்கள். 

* மறுமையில் மனிதன் வெற்றி அடைய ஒழுக்கம் மாண்புகளை பேண வேண்டும். 

* ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்த நாட்டில் ஒழுக்க புரட்சி ஏற்படுத்தவே விரும்புகிறது என்றும், மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்திய சமூகத்தில் செய்து வரும் பணிகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக சிறப்பு விருந்தினர்களுக்கு இஸ்லாமிய புத்தகம், சமரசம், உதயத்தாரகை இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.