News Channel

ஒழுக்கமே சுதந்திரம் அரங்க கூட்டம்

ஒழுக்கமே சுதந்திரம் என்ற பிரச்சார இயக்கத்தின் அங்கமாகக் மேலக்காவேரி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி இணைந்து அரங்க கூட்டம் மற்றும் கண்காட்சி 07.09.2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் சகோதரி ரஹ்மத் நிஷா அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள். 
நிகழ்ச்சியின் துவக்கமாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி மெஹர் பானு அவர்கள் துவக்க உரை ஆற்றினார்கள். 

தலைமை உரையாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப். அப்துல் கலாம் ஆசாத் அவர்கள் உரையாற்றினார்கள்.

மேலக்காவேரி ஜாமியா மஸ்ஜித் தலைவர் ஜனாப். M. முகமது அபூபக்கர் அவர்கள் முன்னிலையில் அரங்க கூட்டம் நடைபெற்றது. 

மேலக்காவேரி ஜாமியா மஸ்ஜித் செயலாளர் ஜனாப் J. ஹாஜி முஹம்மது மற்றும் மிஸ்வா செயலாளர் ஜனாப் A. ஆசாத் அலி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 

அரங்க கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கோயம்புத்தூரில் இருந்து வருகை புரிந்த மௌலவி. M.M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி(செயளாலர் மனிதவள மேம்பட்டுத்துறை JIH கோவை பெரு நகரம்.) அவர்கள் ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இறுதியாக நன்றி உரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாவட்ட அமைப்பாளர் சகோதரர் ஜனாப் முகமது யூனுஸ் அவர்கள் வழங்கினார்கள். 

இந்த அரங்க கூட்ட நிகழ்வில் சுமார் 300க்கு மேற்பட்ட மேலக்காவேரி பெண்கள், ஜமாத்தார்கள், குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்