News Channel

பல்சமய கலந்துரையாடல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக ஒழுக்கமே சுதந்திரம் என்ற நாடு தழுவிய அளவில் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. 

இதன் ஒரு நிகழ்வாக இன்று 17.09.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6 30 மணிக்கு கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலய மறைப்பணி மையத்தில் ஒழுக்கமே சுதந்திரம் நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக பல்சமய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூரில் இருந்து தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திரு கா. பாஸ்கரன், அவர்களும்

பங்குத்தந்தை வட்டார முதன்மை குரு அருட்பணி முனைவர் க. கோஸ்மான் ஆரோக்கியராஜ், அவர்களும்

ஜோதிமலை இறைப்பணி கூட்டம் நிறுவனர் சிவ திரு திருவடிக்குடில் சுவாமிகள் அவர்களும்

மற்றும் சென்னையில் இருந்து வருகை புரிந்த ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் ஜனாப் எஸ் என் சிக்கந்தர் அவர்களும் பங்குபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பௌத்தம், வைணவம், சைவம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் கூறக்கூடிய ஒழுக்கம் சார்ந்து இறைவன் நமக்கு கொடுத்துள்ள ஒழுக்கத்தைப் பற்றி இறை செய்தியை அவரவர் பேசினார்கள். 

மேனாள் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கா. பாஸ்கர் அவர்கள் பௌத்தம் சொல்லக்கூடிய 8 ஒழுக்கம் சார்ந்த கட்டளைகளை கூறி விவரித்தார்கள். அதுமட்டுமில்லாமல் வைணவம் ஒழுக்கத்தை பற்றி என்ன கூறுகிறது என்பதை விவரித்தார்கள். 

அருட்பணி முனைவர். கோஸ்மான் ஆரோக்கியராஜ் அவர்கள் பைபிள் புதிய ஏற்பாடு உள்ளத்தை தூய்மைப்படுத்தும் இறை செய்தியை சிலவற்றை கூறி ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் இருந்தால் அதுவே சுதந்திரம் என்ற கருத்தை கூறினார்கள். 

ஜோதிமலை இறைப்பணி கூட்டம் நிறுவனர் சிவாதிரு. திருவடிக்குடிகள் சுவாமிகள் மது, மாது இதுபோன்ற காரணங்களால் தான் ஒழுக்கக்கேடான விஷயங்கள் இந்த உலகத்தில் ஏற்படுகின்றது. இதற்கெல்லாம் இறைவன் வகுத்து தந்த ஒழுக்கமான செயல்களை செய்தால் அனைவரும் சுதந்திரமாக இருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார்கள்.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் ஜனாப். எஸ். என். சிக்கந்தர் அவர்கள் ஒவ்வொரு இறை நம்பிக்கையாளனும் இறைவன் வகுத்து தந்த சட்டத்தின்படி நடந்தால் அனைவரும் ஒழுக்கமாக இருக்கலாம். எந்த இடத்தில் மனிதன் இறைவன் சட்டத்தை தள்ளி வைத்துவிட்டு மனிதனே சட்டத்தை தனக்கு தேவையான இடத்தில் மாற்றி குழப்பத்தை விளைவித்தானோ அப்போதே ஒழுக்கக்கேடான விஷயங்கள் இந்த உலகத்தில் வந்து விட்டது. இதற்கெல்லாம் ஒரே வழி ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன் நடந்தால் நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்தார்கள். 

வாழ்த்துரை வழங்க சிறப்பு விருந்தினர்களாக S.அரவிந்தன் இயக்குனர் அரசு இன்ஜினியரிங் காலேஜ் அவர்களும்

கும்பகோணம் ரஃபி அசோசியேசன் உரிமையாளர் ஜனாப் M.N. முகமது ரஃபி அவர்களும்

மற்றும் கும்பகோணம் ஆடிட்டர் திரு. C A சண்முகம் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். 

வந்திருந்த அனைவருக்கும் கிஸ்வா தலைவர் P.S யூசுப் மற்றும் கிஸ்வா செயலாளர் ஜனாப் ஜாகிர் உசேன் ஒழுக்கமே சுதந்திரம் என்ற புத்தகத்தை வழங்கி கௌரவித்தார்கள். 

ஒழுக்கமே சுதந்திரம் என்ற நாடு தழுவிய அளவில் நடைபெறும் நிகழ்வாக இந்த பல்சமய கலந்துரையாடல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் சகோதரி ரஹ்மத் நிஷா அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள். ஆரம்பமாக கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி மெஹர் பானு அவர்கள் திருக்குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் கூறினார்கள். 

இறுதியாக நன்றியுரை சகோதரி ஹசீனா P.S யூசுப் வாசித்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு கும்பகோணத்தை சுற்றியுள்ள சமுதாய சகோதர சகோதரிகள் இயக்க தோழர்கள் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று 300 க்கு மேலான நபர்கள்கலந்து கொண்டார்கள்.