அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை சார்பாக 24.9.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் கும்பகோணம் சத்தியசோலை உள் அரங்கில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற நாடு தழுவிய பரப்புரையின் ஒரு அங்கமாக உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஜனாப். முஹம்மது யூனுஸ் அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள்
இந்த நிகழ்ச்சிக்காக ராபிதத்துல் உலமா மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி நூஹ் மஹ்ழரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்து கலந்துரையாடல் நடத்தினார்கள்.
இந்நிகழ்வில் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள 30 க்கும் மேலான ஆலீம்கள் மற்றும் இமாம்கள் வருகை புரிந்தார்கள்.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஒழுக்கக் கேடான விஷயங்கள் சர்வ சாதாரணமாகக் காணப்படுவதைச் சுட்டிக்காட்டி உலமாக்கள் தங்களுடைய பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இஸ்லாத்தின் அடிப்படையில் சரி செய்வது போன்ற விஷயங்களைக் கூறி இஸ்லாம் கூறக்கூடிய ஒழுக்கமே நம்முடைய சுதந்திரம் என்ற நோக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறினார்கள். மேலும் வருகின்ற ஜும்ஆ உரையில் ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் அவர்களை உரை நிகழ்த்துமாறு பரிந்துரைக்கப்பட்டது.
நாடு தழுவிய அளவில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்தி வரும் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரையின் ஒரு நிகழ்வாக இந்த உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...