24.09.2024, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய அளவில் நடத்திவரும் ‘ஒழுக்கமே சுதந்திரம் – பிரச்சார இயக்கத்தின்’ ஒரு பகுதியாக
புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் சார்பாக புதுச்சேரியில் உள்ள
அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க பொறுப்பாளர்களை சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை குறித்து கலந்துரையாடப்பட்டது.
அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க புதுச்சேரி மாநில செயலாளர் திருமதி இளவரசி அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள், மதியம் 1:30 மணியளவில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க துணைத்தலைவர் திருமதி சுதாசுந்தர்ராமன் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்,
சகோதரி ஷாஹின் இன்று சமூகத்தில் நிலவி வரும் ஒழுக்க சீர்கேடுகள், தேவையான நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆலோசனைகள் குறித்தும், பொதுமக்களின் பொறுப்புகள் குறித்தும் மிக விளக்கமாக கூறினார்கள், மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எனும் பேரியக்கம் ஏன் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையை முன்னெடுத்துள்ளது. ஒழுக்கரீதியாக சமூகத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தைக் குறித்தும் விளக்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் கொண்ட புத்தகம், சமரசம், உதயத்தாரகை இதழ்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க துணைத்தலைவர் திருமதி சுதாசுந்தர்ராமன் அவர்கள் தனது உரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் இத்தகைய முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணியினர், ஆண்கள் மற்றும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்க புதுச்சேரி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், சகோதரி ஷாஹின் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.