News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் அங்கமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை தெற்கு மண்டலத்தின் சார்பாக பெண்களுக்கான அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

கோவை ஆசாத் நகர், நூர்சேட் மஹாலில் வைத்து பெண்களுக்கான அரங்கக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் ஜனாப். S.N. சிக்கந்தர் சாஹிப் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் சகோதரி. பாத்திமா சபரிமாலா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் கோவை தெற்கு மண்டல தலைவர் ஜனாப். முஹம்மது பஷீர் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள், மகளிர் அணி தலைவர் சகோதரி. சலீனா பாரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். நிகழ்வில் ஜமாஅத் கோவை பெருநகர மகளிர் அணி தலைவர் ஜனாபா. ஜஹீனா அஹமது அவர்களும், செயலாளர் ஜனாபா. ஷர்மிளா அப்துல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஐநூறுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.