News Channel

ஒழுக்கமே சுதந்திரம் சிறப்பு நிகழ்ச்சி

முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் JIH மகளிர் அணி சார்பாக 
இன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை 
ஒழுக்கமே சுதந்திரம் 
சிறப்பு நிகழ்ச்சி 
புதிய பகுதியில் 
புதிய இடத்தில் நடைபெற்றது. 

மகளிர் அணி பொறுப்பாளர் 
ஷகிலா பானு தலைமை வகித்தார்.
கோவை JIH உறுப்பினர் சகோதரி M.கதீஜா அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
GIO மாணவிகளின் 
இதயத்தை தொடும் வகையில் 
பொற்றோரே‌ விழித்திருங்கள் 
என்ற தலைப்பில் மிகச் சிறப்பான நாடகம் நடைபெற்றது.
நாடகத்தை பார்த்து நிகழ்ச்சிக்கு வருகை தந்த பெற்றோர்கள் அழுதே விட்டார்கள். 
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்த வேண்டும்.
 
இன்றைய காலகட்டத்தில் நடப்பதை அப்படியே கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டது இந்த நாடகம்

என்று அனைவரும் கலங்கிய கண்களுடன் கூறினார்கள்.

மேலும் 
திருக்குர்ஆன் 24 வது அத்தியாயம் அந்நூர் குறித்து கேள்வி பதில் நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 
இந்நிகழ்வில் பெண்கள், மாணவிகள், குழந்தைகள் என 70 நபர்கள் கலந்து கொண்டார்கள்.