பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன் மகளிர் அணி சந்திப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மாநகர சகோதரிகள்
இன்று (23.9.2024, திங்கள்) காலை சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை குறித்து அறிமுகம் செய்தனர்.
பள்ளிக்கூடங்களில் ஒழுக்க மாண்புகளைப் பயிற்றுவிக்க வலியுறுத்தினர்.
பள்ளிக் கல்வித் துறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள், கோரிக்கைகள் குறித்த அறிக்கையையும் அவரிடம் சமர்பித்தனர்.
ஜமாஅத்தின் தேசிய மகளிர்அணி துணைச் செயலாளர் ராபியா பசரி,
மாநில மகளிர் அணிச் செயலாளர் ஃபாத்திமா ஜலால்,
சென்னை மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ராகிலா,
துணை அமைப்பாளர் மைமுனா ஆகியோர்
அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளுடன் சமரசம், உதயதாரகை, இஸ்லாமிய நூல்களையும் வழங்கினர்