News Channel

JIH ladies wing and GIo Activity

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ! 

தேசிய அளவிலான நாடு தழுவிய செப்டம்பர் 1, 2024 முதல் நடந்து கொண்டிருக்கும் "ஒழுக்கமே சுதந்திரம்" எனும் பரப்புரையின் அங்கமாக செப்டம்பர் 8,2024 அன்று "நாணமும் ஈமானும்" எனும் தலைப்பில் GIO கோவை சார்பாக "மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி" காலை 10 : 00மணி முதல் மதியம் 12 : 00 மனி வரை மஸ்ஜிதுல் இஹ்சானில் சிறப்பாக நடைப்பெற்றது. 

இந்நிகழ்ச்சியை இறைவசனங்களுடன் GIO கோவை ஊழியர் சகோதரி ஷிஃபானா அவர்கள் அழகான முறையில் துவங்கி‌ வைத்தார். மேலும், GIOவினுடைய‌ தலைவி சகோதரி மரியம் ஃபர்ஹானா அவர்கள் நிகழ்ச்சியினுடைய நோக்கம் மற்றும் பரப்புரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தலைமையுரை ஆற்றினார். 

இதனைத் தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்‌ கோவை மகளிரணி தலைவி சகோதரி‌ ஜஹினா‌ அஹ்மத் அவர்கள் ஒழுக்கமே சுதந்திரம் எனும் பிரச்சாரம் பற்றிய விரிவான அறிமுகம், நோக்கம் மற்றும் குறிக்கோள்களை  இலகுவான முறையில் பிரச்சாரத்தின் முகவுரையை எடுத்துரைத்தார்கள். 

இச்சிறப்பு நிகழ்ச்சியினுடைய சிறப்புரை "நாணமும் ஈமானும்" எனும் தலைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்‌ கோவை தெற்கு மண்டல மகளிரணி செயலாளர் சகோதரி. பெனாசீர் சமது அவர்கள் ஒழுக்கம்‌ மற்றும் சுய சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி அறிவு மற்றும் சிந்தனையூட்டும் வகையில் சிறப்பாக மற்றும் தெளிவான முறையில் சிறப்புரை ஆற்றினார்கள்‌. 

நிகழ்ச்சியின் இறுதி கட்டம், எம் GIO மாணவிகளுடைய கலந்துரையாடலுடன்‌ இறுதிக்கு வந்தது. இந்த கலந்துரையாடல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பயனுள்ள மற்றும் நுண்ணறிவார்ந்த தகவல்கள் கொண்டதாக அமைந்திருந்தது மாணவிகளுடைய பேச்சு. 

இந்நிகழ்ச்சி மாணவிகளுக்கிடையில் நல்ல வரவேற்பு மற்றும் தீர்க்கமான தாக்கம் எற்படுத்தும் வகையில் கருத்துக்கள் அமைந்திருந்தன, அல்ஹம்துலில்லாஹ்! 

இறையண்பில் என்றும், 
மரியம் ஃபர்ஹானா B.E ,
GIO கோவை தலைவி .