News Channel

அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து - புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி

05.09.2024, ஒழுக்கமே சுதந்திரம் அகில இந்திய பரப்புரை இயக்கம்
 மற்றும் ஆசிரியர் தினம் சார்பாக புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினர் 
புதுச்சேரியில் உள்ள C.M.அஷ்ரப் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக JIH மண்டல அமைப்பாளர் சகோ. அப்துல் ஹமீது கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார், காலை 11 மணியளவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் N.வெங்கடேசன் அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது, சகோ. அப்துல் ஹமீது தனது சிறப்புரையில் இன்று சமூகத்தில் நிலவி வரும் ஒழுக்க சிதைவுகள், தேவையான நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஆலோசனைகள் மற்றும் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் குறித்தும், ஆசிரியர்கள் பொறுப்புகள் குறித்தும் மிக விளக்கமாக கூறினார்கள்.

மேலும் இஸ்லாமிய நூல்கள், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இந்திய சமூகத்தில் செய்து வரும் பணிகள் குறித்தும் மற்றும் புதுவையில் செய்துவரும் பணிகள் குறித்தும் விளக்கினார்.

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் நோக்கம் கொண்ட புத்தகம், சமரசம் இதழ்கள் ஆசிரியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் N.வெங்கடேசன் அவர்கள் தனது உரையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி தங்கள் பள்ளிக்கு செய்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்து அனைவரையும் ஊக்கப்படுத்தினார், மிகவும் மகிழ்ச்சிகரமான சந்திப்பாக அமைந்தது. 

இந்நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் புதுச்சேரி மகளிர் அணியினர் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
 சகோ. அன்வர் அலி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.