News Channel

ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி.

"ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி"

ஒழுக்கமே சுதந்திரம் அகில இந்திய பரப்புரை இயக்கம் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி 
திருப்பூர் கிளை சார்பாக 
இன்று 4.9.2024 மாலை 4 மணி முதல் 
ஆசிரியர்கள் சங்கமிக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
 சகோதரி  சுமையா அப்துல் வதூத் B.Sc MA அவர்களும் 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
அகில இந்திய மகளிர் அணி துணைச் செயலாளர் 
சகோதரி ராபியா பஸரி B.sc CS M.sc PhD .., pursuing அவர்களும் கலந்து கொண்டு
 
PowerPoint presentation PPT மூலமாக சிறப்புரையாற்றினார்கள்.

இன்றைய கால சூழ்நிலையில் மனித சமூகத்திற்கு மத்தியில் நிலவு வரும் ஒழுக்க சிதையில் குறித்தும் 
அதன் பாதிப்புகள் சமூகத்தில் எந்த அளவு பெரிய தீமைகளையும்,
அழிக்க முடியாத தாக்கங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை குறித்தும் 
எதிர்வரும் சந்ததிகளுக்கு குறிப்பாக வளரும் மாணவ மாணவிகள்,குழந்தைகள் எந்த மாதிரியான ஒழுக்க முறமைகளோடு அவர்கள் வளர வேண்டும்! பெற்றோர்களாகிய நாம் எப்படி வளர்க்க வேண்டும் 
என்பது குறித்தும் புள்ளி விவர ஆதாரங்களுடன் 
மிக விரிவாக வழிகாட்டுதல் கொண்ட உரையை நிகழ்த்தினார்கள்.

வருகை தந்த அனைவருக்கும் மிக வியப்பாகவும், வித்தியாசமாகவும், நிறைய செய்திகளை கொண்டதாகவும் நிறைய படிப்பினைகளை கொண்ட உரையாகவும் இருந்தது என்றும் கூறினார்கள்.

திருப்பூர் முழுவதும் பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.
சகோதர சமயத்தை சேர்ந்த ஆசிரியர்களும் 
கலந்து கொண்டு மிகச் சிறப்பான பணியை நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்.
இன்றைய கால சூழ்நிலையில் அவசியம் செய்ய வேண்டிய பணி என்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.

தகவல்:
JIH Tirupur Media team