News Channel

அரசியல் அமைப்பு சட்ட நாள் சிறப்பு நிகழ்ச்சி


கும்பகோணம், நவம்பர் 21:
சத்தியச்சோலை சார்பில் “இன்றைய இந்தியச் சூழலும் அரசியலமைப்புச் சட்டமும்” என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சி இன்று (21.11.2026) மாலை 6 மணியளவில் கும்பகோணம் சத்தியச்சோலை அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளைத் தலைவர் அப்துல் கலாம் ஆசாத் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் முகமது யூனுஸ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
சத்தியச்சோலை பொறுப்பாளர் அப்துல் ரஹ்மான் தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் டி.எம். புரட்சிமணி அவர்கள், “இன்றைய இந்தியச் சூழலும் அரசியலமைப்புச் சட்டமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஊழியர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
அரசியலமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.