அழைப்பியல் சந்திப்பு & சிறப்பு பயான்
திருச்சி அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர்களுடன் கடந்த 31.8.2024 சனிக்கிழமை அன்று ஒருநாள் அழைப்பியல் பயிற்சி பட்டறை முகாம் நடைபெற்றது.
திருச்சியில் அமைந்திருக்கக் கூடிய அஸ்ஸலாம் அரபிக் கல்லூரி மாணவர்கள் அழைப்பில் ரீதியான சந்திப்பிற்காக இஸ்லாமிக் சென்டர் மதுரை கிராமப்புற பகுதிகளுக்கு வருகை தருவதுண்டு. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி அன்று கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மௌலவி அஹமது முஹைதீன் ஃபைஜி அவர்களும், T.E நாசர் சாஹிப் அவர்களும் வருகை புரிந்தார்கள்.
நிகழ்ச்சியின் முன்னதாக மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளர் மௌலவி முகைதீன் குட்டி உமரி அவர்கள் அழைப்பு பணியின் அவசியத்தையும், தேவையும், அழைப்புப் பணியின் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் வருகை புரிந்த மாணவர்களுக்கு அழகிய முறையில் விளக்கம் அளித்தார்கள். பின்பு அனைவரும் பரஸ்பர அறிமுகம் பரிமாறிக் கொண்டு மதிய விருந்தை நிறைவு செய்துவிட்டு மாலை இரண்டு குழுவாக தேர்ந்தெடுத்து
ஒரு குழு
* குராயூர் மற்றொன்று
* அணைக்கரைப்பட்டி பகுதிக்கு அழைப்பில் ரீதியான பயணம் மேற்கொள்ளப்பட்டது.
பயணத்தில் வருகை புரிந்த மாணவர்களுக்கு நல்ல பயிற்சியும், அனுபவமும் அவர்களுக்கு கிடைத்ததை கருத்தாக பகிர்ந்து கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து மகரிப் தொழுகைக்கு பிறகு அணைக்கரைப்பட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் அஸ்ஸலாமு அரபிக் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள்
* சோதனை என்கின்ற தலைப்பிலும்
* கலாச்சார சீரழிவு என்கின்ற தலைப்பிலும் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.
அதில் ஜமாத்தார்கள் ஆண்கள், பெண்கள் என கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுகளை மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளர் ஜனாப் நஜீர் ஹுசைன் அவர்கள் வழிநடத்தினார்
நிறைவாக இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகை புரிந்த மாணவர்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு உணவு பரிமாறி துவாவோடு வழி அனுப்பி வைக்கப்பட்டது.