ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பிரச்சார இயக்கத்தின் அங்கமாக கும்பகோணம் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி சார்பாக கும்பகோணம் சுற்றுவட்டாரத்தில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ரீல்ஸ்(வீடியோ) மற்றும் வினாடி வினா போட்டிகளை நடத்த உள்ளது.
இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஆநிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்டார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி பாடசாலை, ஸ்ரீ மாதா, காவிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி போன்ற பத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகளை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவரும்,மகளிர் அணி பொறுப்பாளர்களும் மற்றும் ஊழியர்களும் நேரில் சந்தித்து பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தையும் போட்டிக்கான அழைப்பிதழையும் வழங்கியுள்ளனர்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பிரச்சார இயக்கத்தின் ஒரு அங்கமாகப் பள்ளி மாணவியர்கள் மத்தியில் ஒழுக்க பண்பை மேம்படுத்தும் வகையில் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை அன்று முதற்கட்டமாக அல்-அமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியர்களுக்கான சிறப்பு ஒழுக்க பண்பியல் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து மற்ற பள்ளிகள் இதைப் போன்று நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.