News Channel

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையை முன்னிட்டு கோவையில் பெண் பேச்சாளர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

செப்டம்பர் 2 ஆம் தேதி ஜமாஅத் கோவை அலுவலகத்தில் வைத்து பெண் பேச்சாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜமாஅத் கோவை பெருநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து கோவை மகளிர் அணி செயலாளர் ஜனாபா. ராபியா பஷீர் அவர்களும், ஜனாபா. பெனாசிர் சமது அவர்களும் பயிற்சி வழங்கினர்.

மேலும் சிறப்புப் பயிற்சியாளராக ஜமாஅத் கோவை மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர் மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.

தொடர்ந்து ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரை குறித்தும், இப்பரப்புரை வாயிலாக மக்களிடத்தில் எடுத்துரைக்க வேண்டிய கருத்துக்கள் குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.