News Channel

முன்மாதிரி கிராமம்

"முன்மாதிரி கிராமம் "


( இரண்டு கிராமத்தில் பூர்வாங்கு பணிகள் துவக்கம் )

தமிழக "ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த்" ( JIH ) நான்காண்டு செயல் திட்டத்தின் ஒளியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை முன்மாதிரி கிராமங்களாக உருவாக்க வேண்டும் என்கின்ற வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. 
அதை அடிப்படையாக வைத்து இஸ்லாமிக் சென்டர் கீழியங்கும் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு பணிகளை துவங்கி உள்ளோம். 
அவ்வகையில் 17 / 09 /2023 அன்று விருதுநகர் மாவட்டம் ஊராம்பட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 
அதன் நிகழ்ச்சியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ( JIH ) மாநில செயலாளரும், மதுரை இஸ்லாமிக் சென்டர் (ICM ) செயலாளருமான மௌலவி: முஹைதீன் குட்டி உமரி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . விருதுநகர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவரான ஜனாப்: சாகுல் ஹமீத் அவர்களும், கிளை உறுப்பினர்களும், ஊழியர்களும் பங்கெடுத்தனர்.
 
அதேபோல் 30 /09 /2023 அன்று மதுரை மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுவதற்கான பூர்வாங்கு பணிகளை மதுரை இஸ்லாமிக் சென்டர் ( ICM ) துணைச் செயலாளரும்,  JIH  இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்ட பொறுப்பாளருமான ஜனாப்: தாயீ , K. நஜீர் ஹுசைன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை JIH ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஜனாப்: பஷீர் அஹமது அவர்களும், உறுப்பினர்களும், ஊழியர்களும் , SIO  உறுப்பினர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இனி வரக்கூடிய காலங்களில் முன்மாதிரி கிராமமாக உருவாக்குவதற்கான பணிகளை துவங்குது என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பணிகள் நடைபெறுவதற்கு அனைவரும் துஆச் செய்யுங்கள்.

JIH - இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் ( ICC )


kms pico download