ஷரியத் சட்டக் கல்லூரி விஜயம்.
திருப்பூர் கிழக்கு முதலிபாளையம் ஹவுசிங் யூனிட்டில்
இயங்கி வரும்
சையத் மில்லத்
ஷரியத் சட்டக் கல்லூரிக்கு
28.09.2023 வியாழன் காலை 11 மணியளவில்
JIH ஹவுசிங் யூனிட் மகளிர் அணி விஜயம் செய்தனர்.
மீலாதுன் நபி முன்னிட்டு
சிறப்பு நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிந்தது.
அந்நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு
ஹவுஸிங் யூனிட் நாஜிமா சகோதரி சகீலா பானு அவர்கள் உரை நிகழ்த்தினார்.
அவரது உரையில்
*நபிகள் நாயகம் (ஸல்)* அவர்களை *செயல்ரீதியாக* பின்பற்றுவது தான் *முழுமையான நபி நேசம்* என்றும்,
நபி ஸல் அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் நமக்கு பல *முன்மாதிரிகள்*
உள்ளன
அவற்றை நாம் சிறப்பாக, முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
என்று
நபிகளாரின் போதனைகளை கொண்டு உரை நிகழ்த்தினார்.
மதரஸா ஆசிரியைகள், பெற்றோர்கள்,
மாணவிகள் என 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
சமரசம் & உதயதாரகை இதழ்களை
மகளிர் அணியினர்& GIO மாணவிகள் வழங்கினார்கள்.
மேலும்
குழு ரீதியாக
பிற மதரஸா *உஸ்தாபிகள்*
*06* நபர்களையும் சந்தித்து
நபிகள் நாயகம் ஸல் அவர்களை
முழுமையாக பின்பற்றி வாழ்ந்து
தீமைகள் முழுமையாக அழிக்க வேண்டும்
அதற்கு ஆலிமாக்கள் முன் வரிசையில் நின்று பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி சொல்லப்பட்டது.
இந்நிகழ்வில்
ஹவுஸிங் யூனிட் மகளிர் அணி
மற்றும் GIO மாணவிகள்
கலந்து கொண்டார்கள்.
தகவல்:
JIH tirupur media team
திருப்பூர் கிழக்கு