News Channel

தையல் இயந்திரம் வழங்கும் விழா


"தையல் இயந்திரம் வழங்கும் விழா"

மதுரை இஸ்லாமிக் சென்டர் சார்பாக இஸ்லாமிக் சென்டர் கிராமப்புறங்களில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழுள்ள , சமூகத்தில் நலிவடைந்த பெண்களை மேம்படைய செய்யும் வகையில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா 12/6/2024 அன்று காலை 11:00 மணி முதல்  01:00 மணிவரை நடைபெற்றது. 

இச்சிறப்பு நிகழ்விற்கு மதுரை இஸ்லாமிக் சென்டர் செயலாளரும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாநிலச் செயலாளருமான மௌலவி , முஹைதீன் குட்டி உமரி அவர்களும், மதுரை இஸ்லாமிக் சென்டர் துணை செயலாளர் ஜனாப்; நஜீர் ஹுசைன் அவர்களும், மதுரை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)  தலைவர் ஜனாப், பஷீர் அஹமது அவர்களும் வருகை புரிந்து நிகழ்வினை சிறப்பித்தனர். 

இலவச தையல் இயந்திரம் வழங்க விழா மதுரை இஸ்லாமிக் சென்டர் சார்பாக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டுதோறும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த 2024 ம் ஆண்டும் 5 இலவச தையல் இயந்திரம் பெண்களுடைய மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டன. பயனடைந்தவர்கள் : 
👉மதினா நகர் 
👉தீன் நகர் 
👉ரமலான் நகர் 
ஆகிய பகுதியின் பெண்கள் பெற்றுக் கொண்டனர். 

இதனுடைய நோக்கம் நலிவடைந்து இருக்கக்கூடிய குடும்பத்தை அதில் உள்ள பெண்களை கண்டறிந்து அவர்களுக்கு இந்த இலவச தையல் இயந்திரத்தின் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வாய்ப்பினைகளை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதுவரைக்கும் பல பெண்கள், அவர்களை சார்ந்த குடும்பங்கள் பயனடைந்திருக்கின்றன. அவ்வகையில் இந்த ஆண்டும் இந்த 5 பயனாளிகள் பயனடைந்து இருக்கிறார்கள்.

வருகை புரிந்த பயனாளர்களுக்கு தேநீர் விருந்து, மற்றும் ,மதிய உணவும் (விருந்தும்) வழங்கப்பட்டது .