News Channel

ரமலான் கால பணிகள்

"இன்றைய பணிகள்"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாநகரில்
இன்று 17.03.2024 நடைபெற்ற பணிகள்.

1) சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு சார்பாக
வேலன் ஹோட்டல் பஸ் ஸ்டாப் அருகில் "நீர் மோர்" வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி 
மதியம் 12 மணிமுதல் 2.30 மணிவரை நடைபெற்றது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அப்பகுதியில் சென்று வந்த அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக *ருசி நிறைந்த* நீர்மோர் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மாவட்டத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் நீர்மோர் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.
சாலிடாரிட்டி இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டு 
நீர்மோர் வழங்கினார்கள்.

2) அழைப்புக் குடை
திருப்பூர் காங்கேயம் சாலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள 
டி மார்ட்  மால் அருகில் அழைப்புக் குடை அமைக்கப்பட்டிருந்தது.
அவ்வழியில் சென்ற பலருக்கும் இஸ்லாம் குறித்தான அறிமுகம் மற்றும்
மடக்கோலைகள் வழங்கப்பட்டது.
சிலர் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய கேள்விகளை கேட்டார்கள் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

3) வெங்கடேசயா காலனி ஊழியர் வட்டம் சார்பாக மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் 
சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்பகுதி மக்கள் மற்றும் பல்வேறு கிளைவட்டங்களில் இருந்து உறுப்பினர்கள் ஊழியர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள்.

4) முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் ஊழியர் வட்டம் சார்பாக சிறப்பு *இஃப்தார்* நிகழ்ச்சி நடைபெற்றது.
வாராந்திர வகுப்பு களுக்கு வருபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

5) ரமலான் பாடத்திட்ட அடிப்படையில் ஊழியர் வட்டங்களில் சிறப்பு ஊழியர் கூட்டங்கள் நடைபெற்றன.
- ஒற்றைப்படை இரவு சிறப்பு நிகழ்ச்சிகள் 
- 21 ஆம் நோன்பு இன்பாஃக் தினம் சிறப்பு நிகழ்ச்சி 
- ரமலான் ஜக்காத் நிதி வசூழித்தல் குறித்த அறிவிப்புகள் செய்யப்பட்டன.

தகவல்: JIH Tirupur Media team.