முப்பெரும் விழா !!
ரமலான் நகர் ஜமாத்தின் சார்பாக நடைபெற்றது.
👉குர்ஆன் துவங்குதல் ,
👉பரிசளிப்புவிழா,
👉ரமலானே வருக!
இராமநாதபுரம் ரமலான் நகர் பகுதியில் கடந்த 10/3/ 2024 ஞாயிற்றுக்கிழமை ரமலான் நகர் முஸ்லிம் ஜமாத் சார்பாக புனித ரமலானை வரவேற்கும் முகமாக ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . அந்நிகழ்ச்சியோடு பரிசளிப்பு விழா மற்றும் குர்ஆன் ஓத துவங்குதல் ஆகிய முப்பெரும் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து 100 குறிப்புகள் என்கின்ற நிபந்தனையோடு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட மதரஸா மாணவ மாணவிகள் நபிகள் நாயகம் அவர்களை குறித்த 100 குறிப்புகளை எழுதி ஆறு நபர்கள் வெற்றியாளராக தேர்வானார்கள். அதோடு மக்தப் மதரஸாவில் குர்ஆன் ஓத துவங்கக்கூடிய 15 மாணவ மாணவிகள் தயாரானார்கள் அவர்களுக்கு குர்ஆன் ஓத துவங்கக்கூடிய நிகழ்ச்சியின் நடைபெற்றது. மூன்றாவதாக ரமலானை வருக சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலச் செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள், மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப் தாயீ நஜீர் ஹுசைன் அவர்கள், ராமநாதபுரம் உலமா சபை வட்ட தலைவர் மௌலவி முஹம்மது ரபிக் உலவி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக மௌலவி அப்துல் கலாம் அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியின் முன்னதாக 15 மாணவ மாணவிகள் ஒன்றாக குர்ஆன் ஓதக்கூடிய சங்கைமிக்க நிகழ்வு சபையோர் முன்னிலையில் நடந்தேறியது.
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மதுரை இஸ்லாமிய சென்டர் துணைச் செயலாளர் ஜனாப் தாயி நஜீர் ஹுசைன் மற்றும் ஜமாத்துல் உலமா ராமநாதபுரம் வட்ட தலைவர் மௌலவி முஹம்மது ரபிக் உலவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் மௌலவி முஹைதீன் குட்டி உமரி அவர்கள் ரமலானே வருக! என்கின்ற தலைப்பில் ஆழிய சிறப்புரை ஆற்றினார். அவர் உரையில் கூறுகையில்... ரமலான் மாதம் நன்மைகள் பூத்துக் குலுங்க கூடிய மாதமாக நம்மை வந்து சேருகின்றது. அதில் நாம் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவி புரிந்தால் அந்த நோன்பாளிக்கு என்ன கூலி கிடைக்குமோ அதே போல நோன்பு திறப்பதற்கு உதவி செய்தவற்கும் அல்லாஹுத்தஆலா வழங்குகிறான் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஒரு சிறு விஷயத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இவ்வளவு சிறப்புகள் வைத்திருக்கின்ற பொழுது
நாம் தொழுகின்ற தொழுகை
நாம் ஓதுகின்ற குர்ஆன்
நாம் வழங்குகின்ற தர்மம்
நம்முடைய உபரியான வணக்க வழிபாடு இவர்களுக்கெல்லாம் அல்லாஹுத்தஆலா ஒன்றல்ல பத்தல்ல 700 அல்ல 7000 அல்ல நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ் கூறுவதாக சொன்னார்கள் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி தருவேன் என்று அல்லாஹ்வே முன் நின்று கூலி தரக்கூடிய மாதமாக இந்த மாதம் இருக்கின்றன ஆக இந்த மாதத்தை அடையக்கூடிய நாம் பாக்கியசாலிகள் காரணம் நமக்கு முன் எத்தனையோ நபர்கள் இந்த பாக்கியத்தை அடையாமல் சென்று விட்டார்கள் அல்லாஹுத்தஆலா நமக்கு இதை வழங்கியிருக்கின்றான் இதை சரியாக பயன்படுத்த வேண்டும் அமல்கள் செய்ய வேண்டும் அல்லாஹ்விடத்தில் நற்கூலி பெற வேண்டும் நாளை மறுமையில் ரய்யான் என்று சுவனத்தின் வாசலில் நுழையக்கூடிய பாக்கியத்தை பெற வேண்டும் என்று அழகான முறையில் மிகச் சிறப்பான உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியை ரமலான் நகர் ஜமாத் தலைவர் தலைமை ஏற்று நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பாக நிகழ்ச்சி நடந்து இறுதியாக வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.