வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் ஹரியானாவில் ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. இதை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். கலவரக்காரர்கள் மற்றும் சமூக விரோதிகளால் தூண்டப்பட்ட வன்முறைச் சம்பவங்களை ஜமாஅத் கண்டிக்கிறது.
விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தின் போது வெளிப்படையாக ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டு கலவரங்கள் நடந்துள்ளன. இதில் அப்பாவி மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுள்ளன. உயிர்கள் வேட்டையாடப்பட்டுள்ளன. இந்த கொடுஞ்செயல்களை ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
இக்கலவரத்தில் *செக்டார் 57* மசூதியில் பணியாற்றிய *மௌலானா சஅத்* மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் உட்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்காமல், கண்மூடித்தனமாக முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யப்பட்டதையும் ஜமாஅத் கண்டிக்கிறது. வகுப்புவாத பதட்டங்களைத் தூண்டிவிட்டு, வெறுப்பு விதைகளை விதைத்து அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காகவே இத்தகைய சதித் திட்டங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
பேரா. சலீம் இன்ஜினியர்,
துணைத் தலைவர்
ஊடகத்துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு & புதுச்சேரி