News Channel

காண்டையில் சிறப்பு நிகழ்ச்சி

காண்டையில் சிறப்பு நிகழ்ச்சி 

கான்டை முஸ்லிம் ஜமாத் சார்பாக கடந்த 6/3/2024  தேதியில் ரமலானே வருக! சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருமங்கலம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிளை தலைவர் ஜனாப், அப்துல் ஹக்கீம் அவர்கள் வருகை புரிந்தார்கள். 
நிகழ்ச்சியின் துவக்கமாக காண்டை முஸ்லீம் ஜமாத் ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் மௌலவி , அப்துல் மாலிக் ஸலாமி அவர்கள் திருமறை வசனத்தை ஓதி துவக்கி வைத்தார்கள். 
ரமலானே வருக! என்கின்ற தலைப்பில் கூறுகையில்.... ரமலான் மாதம் நம்மை வந்த அடைய இருக்கின்றது. இம்மாதத்திலே நாம் நன்மைகளை பெறக்கூடிய அமல்களை புரிந்து நாம் இபாதத்தில் ஈடுபட வேண்டும் சின்ன சின்ன காரியங்களுக்கு கூட அல்லாஹுத்தஆலா பெரிய அளவிலே வெகுமதி தர காத்திருக்கிறான். இந்த ரமலானின் நோக்கமே நாம் இறையச்சம் உள்ளவர்களாக மில்லர வேண்டும் மாற வேண்டும் வாழ வேண்டும். ஆகவே வருகின்ற ரமலான் காலங்களிலே அதிகமான நேரங்களை வணக்க வழிபாடுகளில் நாம் செலவழித்து அல்லாஹ்வுக்கு பிடித்த அடியார்களாக நாம் வாழ வேண்டும் என்று பல ஹதீஸ்களை மேற்கோள் காட்டி சிறப்புரை ஆற்றினார்கள். 
பின்பு காண்டை முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலின் இமாம் மௌலவி அப்துல் மாலிக் ஸலாமி அவர்கள் தங்களின் உரையின் வாயிலாக இந்த ரமலான் மாதத்தின் மாண்புகளையும் இந்த ரமலான் நமக்கு பெற்றுத் தரக்கூடிய வெகுமதிகளையும் இந்த ரமலானில் நோன்பாளிகளுக்கு அல்லாஹுத்தஆலா தயார் செய்து வைத்திருக்கின்ற சுவனத்தையும் சுபச் செய்தியாக கூறி உரை நிகழ்த்தினார்கள் வருகை புரிந்த அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தன.