முஹமதியாபுரத்தில் சிறப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம், முகமதியாபுரம் பகுதியில் கடந்த 6/3/ 2024 புதன்கிழமை அன்று ரமலான் வருக! சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முகமதியாபுரம் முஸ்லிம் ஜமாத்தின் சார்பாக ரமலான் வருக சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன. நிகழ்ச்சியின் துவக்கமாக முகமதியாபுரம் ஜும்ஆ பள்ளிவாசலின் இமாம் ஆலிம், அபூபக்கர் தாஃவதி அவர்கள் இறைமறை வசனத்தை ஓதி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச் செயலாளர் ஜனாப் தாயி நஜீர் ஹுசைன் அவர்கள் வருகை புரிந்திருந்தார்கள். சிறப்பு அழைப்பாளர் ரமலானை வருக! என்கின்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். உரையில் அவர்கள் கூறுகையில் நன்மைகள் பூத்துக் குலுங்க கூடிய மாதம் நம்மை வந்து அடைய இருக்கின்றன. உலகில் உள்ள அனைவருக்கும் அல்லாஹ் அவனுடைய ரஹமத்தை பொதுவாக இறக்கி வைக்கின்றான். மனிதர்களில், முஸ்லிம்களில் யார் அதை பெற்று கொள்கிறாரோ அவர் பாக்கியம் நிறைந்தவராக கருதப்படுகிறார். யார் அந்த ரஹமத்தின் நிலைகளை துச்சமாக, பாராமுகமாக விட்டு விடுகிறார்களோ அவர்கள் பாக்கியம் அற்றவர்களாக மாறிவிடுகிறார்கள். முஸ்லிம் சமூகத்திற்கு இந்த ரமலானில் எண்ணிலடங்கா நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கிறான்.
👉குர்ஆன் மறுமையில் பரிந்துரை செய்கிறது
👉நோன்பு மறுமையில் பரிந்துரை செய்கிறது
👉நோன்பாளிகளுக்கு என்று பிரத்தியோகமான சொர்க்கத்தின் வாசல் ரய்யான் தயாராக இருக்கின்றன
👉1000 மாதங்களை விட சிறப்பான இரவு வந்த அடைய இருக்கின்றன
👉 அல்லாஹ்வின் பாதையில் நன்மைகளை எதிர்பார்த்து செய்யக்கூடிய அமல்கள் ஒன்றுக்கு பத்து, 700 என்று அபிவிருத்தியாக அல்லாஹ் வழங்க இருக்கின்றான். இவைகள் எல்லாம் யார் அடைந்து கொள்கிறார்களோ ! அவர்கள் நாளை மறுமையில் வெற்றி அடைவார்கள் என்கின்ற சுபச் செய்தியை தங்களின் உரையின் வாயிலாக மக்களுக்கு எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் மிக அழகிய முறையில் உரை நிகழ்த்தினார். வருகை புரிந்த ஜமாத்தார்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.