தீன்நகரில் சிறப்பு நிகழ்ச்சி
ராமநாதபுரம் தீன் நகரில் கடந்த 3/3/2024 ஆம் தேதியில் ரமலானை வருக! சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் வரக்கூடிய ரமலானை குறித்த செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்து அதிகமான அமல் செய்யக்கூடிய மக்களாக மாற வேண்டும் என்ற நோக்கில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
அவ்வகையில் இந்த ஆண்டும் தீன் நகர் ஜமாத்தின் சார்பாக மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்கள். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மதுரை இஸ்லாமிக் சென்டர் துணைச்செயலாளர் ஜனாப்: நஜீர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டார்.
அவர் சிறப்புரையில் கூறுகையில் ரமலான் மாதம் என்பது
👉நன்மைகள் பூத்துக் குலுங்கக் கூடிய மாதம்
👉ஒவ்வொரு அடியானுடைய அமல்கள் அல்லாவின் தரப்பில உயர்த்தப்படக்கூடிய மாதம்.
👉ரமலான் மாதத்தில் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய மாதம்.
👉ஒரு மனிதன் சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த சொர்க்கத்தை உறுதி செய்யப்படக்கூடிய மாதம் ரமலான் .
👉ஆயுள் முழுவதும் அமல்கள் செய்தாலும் அடைய முடியாத பெரும் பாக்கியத்தை ரமலானில் லைலத்துல் கதர் இரவின் மூலமாக அடையப்படக்கூடிய மாதம் என்று உரைகளிலே ரமலான் மாதத்தின் மகத்துவத்தை எடுத்துக் கூறி அழகான முறையில் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக தீன் நகர் ஜமாத் தலைவர் அவர்கள் தலைமை உரையாற்றினார் தலைமை உரையிலே இந்த நிகழ்வின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக தீன் நகர் ஜும்ஆ பள்ளிவாசலின் துணை இமாம் ஹாபில் அபுதல்ஹா அவர்கள் கிராத் ஓதினார். நிகழ்ச்சியை அழகுற வழி நடத்தி வரவேற்புரை ஆற்றினார் தீன் நகர் ஜும்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஜாபர் சாதிக் மன்பஈ அவர்கள்.
வருகை புரிந்த ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது.