News Channel

தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு ( Tamilnadu Relief Wing : TN-RW) தன்னார்வலர்கள் 3 வது பயிற்சி முகாம்

 தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழு ( Tamilnadu Relief Wing - TN-RW) தன்னார்வலர்கள்
 3 வது பயிற்சி முகாம் மே 2 .3 நாட்களில் கோவையில நடைபெற்றது.
 
முதல் நாள் அன்று காலை 9.30  மணிக்கு  நிகழ்ச்சி தொடங்கியது .. சகோதரர் முஹம்மது ஆரிப் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்க உரையை சகோதரர் உமர் பாரூக் அவர்கள் வழங்கினார்.  .  .
 
காலை 11 மணி முதல் கீழ்க்கண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1. வெயிட் ஷிப்டிங் ( weight shifting)
2.  மெட்டல் கட்டிங் ( metal cutting)
3.  வுட் கட்டிங் ( wood cutting)
4. மரம் ஏறுதல் ( tree climbing). . 
 
 மதியம் floating rescue எப்படி என்ற பயிற்சியும் வழங்கப்பட்டது.
.
2 ம் நாள் பயிற்சி (3.5.2026)
 
இரண்டாம் நாள் பயிற்சியில்உயரமான கட்டிடத்தில் இருந்து அவசர நேரங்களில் கயிறு மூலம் கீழே இறங்குவதுமேலே ஏறுவது, தீ விபத்து சூழ்நிலையில் மாடியில் இருந்து கயிறு மூலம் மக்களை மீட்பது  ( building fire rescue )  என்ற பயிற்சிகள் அளிக்கப் பட்டன. 
 
இதன் பின்னர் மாநில தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்கள் தலைமை உரை வழங்கினார்கள்.  
அடுத்ததாக இது வரை அளிக்கப் பட்ட பயிற்சிகளில் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் திறன் சோதனை (skill test) நடத்தி மதிப்பிடப் பட்டார்கள். .  இறுதியாக மாநில துணை தலைவர் சகோதரர் i ஜலாலுதீன் பேசினார் .
 
மாநில தலைவர் மௌலவி முஹம்மது ஹனீபா மன்பயீ அவர்கள் அனைத்து தன்னார்வலர்களுக்கும் அவர்களது சீருடை ( uniform) வழங்கி கௌரவித்தார்.  TN RW கேப்டன் அசாருதீன் நன்றியுரை வழங்க முகாம் இனிதே நிறைவு பெற்றது.