News Channel

"ஈரான் உச்சத் தலைவரின் இந்திய பிரதிநிதியுடன் சந்திப்பு"

"ஈரான் உச்சத் தலைவரின் இந்திய பிரதிநிதியுடன் சந்திப்பு"
27.03.2026 –
வெள்ளிக்கிழமை காலை
சென்னையில்
இந்தியாவில் உள்ள ஈரான்
உச்சத் தலைவரின் பிரதிநிதி
டாக்டர் மாஜீத் ஹகீம் இலாஹி அவர்களையும்,
ஜனாப் சையத் தகி ஹைதர் நக்வி அவர்களையும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர்
மௌலவி A.முஹம்மது ஹனீஃபா மன்பயீ அவர்கள் தலைமையிலான
மாநில பிரதிநிதிகள் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில்
எஸ். என். சிக்கந்தர்,
நசீர் அத்தாவுல்லா,
அஷ்ரஃப் அலி,
யூனுஸ் சேட்,
ஜான் முஹம்மது மற்றும் சகோதரி ராபியா பஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு அன்பும் மரியாதையும் மிக்க சூழலில் நடைபெற்றது.
ஈரான் மக்களுக்கு எங்களின் முழுமையான ஆதரவும் மனமார்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்தார்கள்.
மேலும்
இந்த மாதம் சமரசம் இதழில் வெளிவந்த ஈரான் போர்
குறித்த கட்டுரை அவர்களுக்கு வழங்கி இந்திய மக்களுடைய ஆதரவுகளையும் தெரிவித்தார்கள்.
மேலும் இந்திய பிரதிநிதி
டாக்டர் மாஜீத் ஹகீம் இலாஹி அவர்கள்
இந்திய மக்கள் மிகச் சிறப்பாக ஈரானுக்கு முழு ஒத்துழைப்பு தருவதை குறித்து பெரும் மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
இச் சந்திப்பு அன்பும்,
மனித நேயமும் மிக்க மிக சிறந்த கலந்துரையாடல் சந்திப்பாக, மனநிறைவாக அமைந்தது.