News Channel

பத்திரிக்கை அறிக்கை

பத்திரிக்கை அறிக்கை
30.12.2025

வடமாநில இளைஞர் மீது தாக்குதல்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் 
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பயீ அவர்கள் கடும் கண்டனம்.

ஊடகங்களுக்கு அவர் அளித்த அறிக்கையில் 

சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளி மீது நடந்த கொடூர தாக்குதல் – குற்றவாளிகள்  மீது கடும் நடவடிக்கை தேவை

சென்னை – திருத்தணி மின்சார ரயிலில் பயணம் செய்த வடஇந்திய புலம்பெயர் தொழிலாளி K.சுராஜ் என்ற இளைஞரை
சிறுவர்கள் குழு ஒன்று மிகக் கொடூரமாக தாக்கிய சம்பவம், சமூகத்தில் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 27.12.2025 அன்று நடந்த இந்த சம்பவத்தில்,
 17 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் பாதிக்கப்பட்ட நபரை முதலில் ரயிலில் தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
 
பின்னர் ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயங்களுடன் பாதிக்கப்பட்ட K.சுராஜ் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து 

காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, 
குற்றத்தில் ஈடுபட்ட நான்கு சிறுவர்களையும் கைது செய்து, சிறார் சீர்திருத்த இல்லத்தில் ஒப்படைத்துள்ளது என்பது வரவேற்கத்தக்கதாகும்.

ஆனால்,
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து இது மிகப் பெரிய கேள்விக்குறியை எழுப்புகிறது.

சமூக ஊடக புகழ், போதைப்பொருள் கலாச்சாரம் மற்றும் வன்முறை மனப்பாங்கு இளைஞர்களிடம் அதிகரித்து வருவதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது.

தமிழக அரசிற்கு 
எனது  கோரிக்கைகள் :

- இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.

- புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தனி கண்காணிப்பு முறை உருவாக்கப்பட வேண்டும்.

- இளைஞர்கள் போதைப்பொருள் மற்றும் வன்முறை கலாச்சாரத்திலிருந்து விலக 
அரசு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கும்பல் தாக்குதல் கலாச்சாரம் நம்முடைய மாநிலத்திலும் பரவுவது மிகவும் கவலையளிக்கிறது 
இது மனித குலத்திற்கே எதிரான செயலாகும்.

இது போன்ற அவலங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்டெடுக்க 
அரசும்,சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும்.


பாதிக்கப்பட்ட K.சுராஜ் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றோம். 

வெளியீடு:
S.சாகுல் ஹமீது 
மாநில ஊடகச் செயளாலர் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
தமிழ்நாடு& புதுச்சேரி

https://www.facebook.com/share/p/1D7Uw4UTBE/