News Channel

அகில இந்திய மத நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர்கள் சங்கமம்

நாட்டின் மத நல்லிணக்கத்திற்காக முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையிலும் 
கூட்டு முயற்சியிலும் முன்வர வேண்டும்: 

சையத் சஆதாத்துல்லாஹ் ஹுசைனி, தலைவர், 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் டெல்லியில் இரண்டு நாள் ‘அகில இந்திய மத நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர்கள் சங்கமம்’ வெற்றிகரமாக நடைபெற்றது.

புது தில்லி:
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் 
மத நல்லிணக்கத் துறை சார்பில்,
 ‘அகில இந்திய மத நல்லிணக்க ஒருங்கிணைப்பாளர்கள் சங்கமம்’ என்ற இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நாட்டின் சுமார் 20 மாநிலங்களில் இருந்து மத நல்லிணக்கத்திற்காக அடித்தட்டு மக்களிடையே பணியாற்றி வரும் ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். 

பல்வேறு மாநிலங்களில் நிலவும் மத நல்லிணக்கச் சூழலைப் புரிந்துகொள்வது, இதுவரை செய்யப்பட்ட பணிகளை ஆய்வு செய்வது மற்றும் எதிர்கால முயற்சிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குவது ஆகியவையே இக்கூட்டத்தின் நோக்கமாகும்.

நிகழ்ச்சியில் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் சையத் சஆதாத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் 
தனது முக்கிய உரையில் குறிப்பிட்டதாவது:

"மத நல்லிணக்கத்திற்கான பணி என்பது தற்காலிகமானது அல்ல, 
அது நிரந்தரமானது. 

மக்களுக்கிடையிலான உறவுகளைச் சீர்படுத்துவதையும், அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்துவதையும் அடிப்படையாகக் கொண்டதுதான் இஸ்லாம். 

திருக் குர்ஆன் இதற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கிறது. 
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் இதற்காகவே அர்ப்பணித்தார்கள். 

இந்தப் பணியை இப்போது தனிநபர் அளவோடு நிறுத்திக்கொள்ளாமல்,
 நிறுவன ரீதியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் டி. ஆரிப் அலி பேசுகையில்:

"மத நல்லிணக்க முயற்சிகள் என்பவை சூழ்நிலை அழுத்தத்தால் எடுக்கப்படுபவை அல்ல. 
அவை நமது பொறுப்பாகும்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கொள்கையில் எப்போதும் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. 

இறைவனின் படைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நல்லிணக்கம் இருப்பது போலவே, மனிதர்களுக்கிடையேயும் நல்லிணக்கம் இருப்பது அவசியமாகும்," என்றார்.

இந்நிகழ்வில் 
சுவாமி சர்வலோக் ஆனந்த் ஜி மஹராஜ் பேசுகையில், மத நல்லிணக்கத்திற்கு மதங்களுக்கு இடையிலான உரையாடல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

மக்கள் தத்தமது நம்பிக்கைகளைப் புரிந்துகொள்வதோடு, மற்றவர்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

கியானி மங்கல் சிங் ஜி பேசுகையில், அனைத்து சமூகங்களுக்கும் இடையே பாலங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். 

மக்களுக்குச் செய்யும் தன்னலமற்ற சேவையே இதை அடைவதற்கான மிகச் சிறந்த வழி என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்
 தேசியச் செயலாளர் சகோதரி ஷாயிஸ்தா ரிஃபத், 
மத நல்லிணக்கத்தில் பெண்களின் பங்கு குறித்துப் பேசினார். 

உலகின் பாதி மக்கள் தொகையை இந்தப் பணியிலிருந்து விலக்கி வைக்க முடியாது என்றும், 
பெண்கள் முன்வந்து இதில் தீவிரப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

சமுதாயமும் நாடும் அவர்களுக்கு இதற்கான அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது, 
நாடு முழுவதும் 'தார்மீக் ஜன் மோர்ச்சா' மற்றும் 'சத்பாவனா மஞ்ச்' அமைப்புகளை எவ்வாறு அதிக செயல்திறன் கொண்டதாக மாற்றுவது என்பது குறித்த கருத்துகளைப் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொண்டனர். 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் துணைத் தலைவர் பேராசிரியர் சலீம் இன்ஜினியர், பங்கேற்பாளர்கள் எவ்விதப் பாகுபாடும் இன்றி நம்பிக்கையுடன் பணியாற்ற அறிவுறுத்தினார். 

நிகழ்ச்சியின் முடிவில், 
நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பங்கேற்பாளர்கள் முழு வலிமை, பொறுமை, ஞானம், விடாமுயற்சி மற்றும் துணிச்சலுடன் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைக்க உறுதி ப உறுதி எடுத்துக் கொண்டனர்.

வெளியீடு:
சல்மான் அகமது
தேசியச் செயலாளர், 
ஊடகத் துறை
புது தில்லி.